Sunny Leone Tweet | பெட்ரோல் விலை 100 ரூபாய்.. எல்லோரும் சைக்கிளில் போலாம்..! - சன்னி லியோனின் கிண்டல் ட்வீட்
பாலிவுட்டில் பிஸியாக நடித்து வரும் நடிகை சன்னி லியோன், தமிழில் அவர் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் தயாராகி வருகின்றன
நாட்டில் பெட்ரோல் விலை 100 ரூபாய் கடந்த நிலையில், நடிகை சன்னி லியோன் சைக்கிளுடன் நிற்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த விலை நிலவரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம், எண்ணெய் நிறுனங்களின் லாபம், மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பெட்ரோல் விலை அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய் கடந்தது. இந்த விலை உயர்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசல் விலையும் 100 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வை கண்டித்து ஒட்டு மொத்த நாடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
GV Prakash Songs Auction: பைனான்ஸ் ஆப்பில் பாடல்களை ஏலத்தில் விடும் ஜி.வி.பிரகாஷ்! காரணம் இதுதான்..!
தமிழ்நாட்டிலும் 38 மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை ரூபாய் 100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால் ஏழை, எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாங்கும் ஊதியமும், உழைக்கும் பணமும் பெட்ரோல் போடுவதற்காகவே செலவிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். வடமாநிலங்களில் சதத்தை தொட்ட பெட்ரோல் விலை தமிழ்நாட்டிலும் தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அதற்கான அறிவிப்பு ஏதும் தற்போது வெளியாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
இந்நிலையில், பாலிவுட் நடிகை சன்னி லியோன், பெட்ரோல் விலை 100 ரூபாய் அதிகரித்ததை கிண்டல் செய்யும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவை ஒன்றை இட்டுள்ளார். அவரது பதிவில், ‘கடைசியில் பெட்ரோல் விலை 100 ரூபாய் தாண்டியுள்ளது. உங்கள் ஆரோக்கியத்துடன் மீது கவனம் செலுத்துங்கள்” என்று கூறியுள்ளார். அத்துடன் சைக்கிளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அனைவரும் சைக்கிளுக்கு மாறுங்கள், சைக்கிள் ஓட்டலாம் வாங்க என்று கூறி, பெட்ரோல் விலை உயர்வு குறித்து கிண்டலாக கூறியுள்ளார்.
When it's finally crossed ₹100...you gotta take care of your health!!
— sunnyleone (@SunnyLeone) July 8, 2021
#Cycling is the new #GLAM 🚴♀️⛽️ pic.twitter.com/M6QSCnfLkD
பாலிவுட்டில் பிஸியாக நடித்து வரும் நடிகை சன்னி லியோன், தமிழில் அவர் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. கொரோனா தொற்று காலத்தில்,சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு பல உதவிகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
In Pics: அமெரிக்காவில் சிகிச்சை, நண்பர்கள் சந்திப்பு : சென்னை திரும்பிய ரஜினி!