GV Prakash Songs Auction: பைனான்ஸ் ஆப்பில் பாடல்களை ஏலத்தில் விடும் ஜி.வி.பிரகாஷ்! காரணம் இதுதான்..!
டிஜிட்டல் சொத்துக்களுக்கு முக்கியத்துவம் பெருகிவரும் சூழலில் என்எஃப்டி பற்றி புரிந்துகொண்டால் ஜிவி பிரகாஷின் முயற்சியும் புரியும்.இதன் பின்னணியில் இருப்பது பிளாக்செயின் தொழில்நுட்பம் ஆகும்.
பெரிய பெரிய சொத்துகளைதான் எல்லாரும் ஏலம் விடுவாங்க. ஆனால் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இதில் கொஞ்சம் வித்தியாசம். தனது பாடல்கள்தான் தன்னுடைய சொத்து என அவற்றை ஏலம் விடுகிறார் அவர். பினான்ஸ் (binance) என்கிற ஆன்லைன் தளத்தில் தனது பாடல்களை ஜி.வி.பிரகாஷ் ஏலத்தில் விடுவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஒரு கலைஞர் தனது படைப்புகளை இவ்வாறாக என்எஃப்டி முறையில் ஏலம் விடுவது இதுவே முதல்முறை. 6 பாடல்களை அவர் ஏலம் விடுகிறார். அதன் ஆரம்ப விலையாக 5 எரித்தீயம் என நிர்ணயித்துள்ளார்.
டிஜிட்டல் சொத்துகளுக்கு முக்கியத்துவம் பெருகிவரும் சூழலில் என்எஃப்டி பற்றி புரிந்துகொண்டால் ஜிவி பிரகாஷின் முயற்சியும் புரியும். இதன் பின்னணியில் இருப்பது பிளாக்செயின் தொழில்நுட்பம். பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கிரிப்டோகரன்ஸி, என்எஃப்டி போன்றவை செயல்படுகிறது. பரிமாற்றம் பாதுகாப்பானதாகவும், வெளிப்படையாகவும் இருப்பதால் வங்கிகள் போன்ற இடைத்தரக அமைப்புகளின் தேவையை பிளாக்செயின் தொழில்நுட்பம் இல்லாமல் செய்துவிடுகிறது. ஆனால், பிட்காயினைவிட என்எஃப்டி சற்றே வித்தியாசமானது.
Super happy to launch my first original NFT Thru @TheBinanceNFT @binance … here is the link to the page https://t.co/jOaqSGStpE … super happy to venture into this new world of NFTs … do share and spread the word … pic.twitter.com/t7W9u66kq5
— G.V.Prakash Kumar (@gvprakash) July 8, 2021
ஒவ்வொரு என்எஃப்டிக்கும் ஒரு மதிப்பு. ஒரு பிட்காயினைக் கொடுத்து இன்னொரு பிட்காயின் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், ஒரு என்எஃப்டியைக் கொடுத்து இன்னொரு என்எஃப்டி வாங்க முடியாது. என்எஃப்டி முதன்முதலாக 2017-ம் ஆண்டு கிரிப்டோகிட்டீஸ் என்ற ஆன்லைன் கேமில் தான் அறிமுகமானது. அந்த ஆன்லைன் கேமில் வரும் பூனைகளை விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். இப்படித்தான் என்எஃப்டி நடைமுறைக்கு வந்தது. ஆன்லைன் பூனையில் ஆரம்பித்தது தற்போது ரியல் டைமில் ரியல் எஸ்டேட் அளவு வளர்ந்து இருக்கிறது. தற்போது நிஜ உலகில் நிலம் வாங்குவது எல்லாம் பழைய கதையாக மாறிவிடும் அளவுக்கு மெய்நிகர் உலகில் (virtual reality) நிலம் வாங்கும் போக்கு ஆரம்பமாகி இருக்கிறது. இதைத்தான் இப்போது ஜிவி பிரகாஷ் முயற்சித்திருக்கிறார். மெய்நிகர் உலகில் தனது படைப்புகளை அவர் ஏலம் விடுகிறார்.
காசியில் படமாக்கப்பட்ட ஜி.வி பிரகாஷின் ‘அடங்காதே’ - புதிய அப்டேட் என்ன?
ஜி.வி பிரகாஷ் குமார்: தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராக மாறியவர்களில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். இவர் 2010-ஆம் ஆண்டு ’வெயில்’ திரைப்படத்தின் மூலம் தன்னுடைய இசையமைப்பாளர் பயணத்தை தொடங்கினார். அதன்பின்னர் பல படங்களுக்கு இசையமைத்தார். தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் இவரின் இசை சிறப்பான ஒன்றாக அமைந்தது. அதன்பின்னர் வெற்றிமாறன்,தனுஷ் மற்றும் ஜி.வி.பிரகாஷ் கூட்டணி பெரிய அளவில் ஹிட் அடித்தது. இப்படி பல படங்களுக்கு இசையமைப்பாளராக வலம் வந்துள்ளார்.