படப்பிடிப்பு தளத்திலிருந்து சூர்யா 40 அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்..
சூர்யா 40 படப்பிடிப்பு தளத்தில் இருந்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் சூர்யா 40 படப்பிடிப்பு தளத்தில் இருந்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம். பிரபல நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா 1997-ஆம் ஆண்டு வெளியான தளபதி விஜயின் நேருக்கு நேர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ஆரம்ப காலகட்டத்தில் தன்னுடைய நடிப்புக்காக பெரிய அளவில் விமர்சனம் செய்யப்பட்ட சூர்யா தன்னைத்தானே மெருகேற்றி இன்று முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.
நந்தா, காக்க காக்க, பிதாமகன் போன்ற பல படங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் தனது மனைவியும் நடிகையுமான ஜோதிகாவின் 36 வயதினிலே படத்தின் மூலம் நடிகர் சூர்யா ஒரு தயாரிப்பாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இதுவரை 9 படங்கள் அவருடைய தயாரிப்பில் உருவாகியுள்ளன.

.@Suriya_offl from the sets of #Suriya40BySunPictures@pandiraj_dir @immancomposer #Suriya40 pic.twitter.com/gBXR3KIZ1e
— Sun Pictures (@sunpictures) April 9, 2021

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகி ஆஸ்கர் நாமினேஷன் வரை சென்ற சூரரைப்போற்று சூர்யாவின் அடுத்த படத்தை மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாக்கியது. கொரோனா பரவலால் தடைப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தனது 40-வது படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் சூர்யா. பாண்டிராஜ் ராஜ் இயக்கத்தில் இமான் இசையில் இந்த படம் உருவாகிவருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு போஸ்ட்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.