Watch Video: அர்ஜூன் அண்ணா...! மாற்றுத்திறனாளி ரசிகையை மேடைக்கு தூக்கிச்சென்ற ரோஜா நாயகன்..! கண்கலங்கிய ரசிகர்கள்.!
சன் குடும்ப விருது நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி ரசிகையை ரோஜா நாயகன் அர்ஜூன் தூக்கிச்சென்று மேடையில் அமரவைத்தது ரசிகர்களை கண்கலங்க வைத்தது.
சன் தொலைக்காட்சியின் சீரியல்களுக்கு என்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலுக்கு என்று தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரின் நாயகன் நாயகியான அர்ஜூன் - ரோஜா ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, தொடரின் நாயகன் கதாபாத்திரமான அர்ஜூனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், சன் குடும்ப விருதுகள் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரோஜா சீரியலின் நாயகன் அர்ஜூன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிபு சுரேனுக்கு விருது வழங்கப்பட்டது.
அப்போது, விழாவில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் விழா அரங்கில் அர்ஜூன் அண்ணா என்று சிபு சுரேனை அழைத்தபடி வந்தார். அவரை கண்ட சிபு சுரேன் நீ வர வேண்டாம். நான் வருகிறேன் என்று அந்த பெண்ணிடம் சென்று அந்த பெண்ணை தூக்கி மேடைக்கு வந்து அமரவைத்தார். அவர் அருகிலே சிபு சுரேனும் அமர்ந்து பேசினார். அந்த பெண் சிபுசுரேனின் தீவிர ரசிகை ஆவார். அந்த பெண்ணின் அன்பை கண்ட சிபுசோரன் மேடையிலே கண்கலங்கினார்.
View this post on Instagram
ரோஜா சீரியல் நாயகன் அர்ஜூன் மீது அவரது மாற்றுத்திறனாளி ரசிகை வைத்திருந்த அன்பு விழாவில் பங்கேற்ற அனைவரையும் கண்கலங்க வைத்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்