மேலும் அறிய

Parliament Budget Session: ஆளுநருக்கு எதிரான ஸ்கெட்ச்சில் திமுக..! பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம், திட்டம் என்ன?

Parliament Budget Session: அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசு தலைவர் உரையுடன் இன்று தொடங்க உள்ளது.

Parliament Budget Session: அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

பட்ஜெட் கூட்டத்தொடர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்குகிறது. இதில் இரு அவை உறுப்பினர்களும் கூட்டாக பங்கேற்க உள்ளனர். இதையடுத்து இந்த கூட்டத்தொடரானது ஏப்ரல் 2ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முடற்கட்ட கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 13ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், இரண்டாவது கட்டம் மார்ச் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ம் தேதி வரை நீள்கிறது. இதனிடையே, வரும் பிப்ரவரி 1ம் தேதி 2026-27 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையைம் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தாக்கல் செய்கிறார். இது அவரது 9வது நிதிநிலை அறிக்கையாகும். அதோடு, இந்திய வரலாற்றில் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவே ஆகும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மொத்தம் 30 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.  

வெடிக்க காத்திருக்கும் பிரச்னைகள்:

இதனிடையே வெளியாகியுள்ள தகவலின்படி, கூட்டத்தொடரின் போது மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றியது, சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் தொடர்பான விவாதங்களை முன்னெடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாம். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உத்தி குழு செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் கூடியது . உறுப்பினர்கள் VB G RAM G சட்டம் மற்றும் SIR உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புறக்கணித்த ஆளுநர்கள்

முன்னதாக தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கியது. அப்போது தொடர்ந்து மூன்றவாது முறையாக ஆளுநர் ஆர். என். ரவி உரையை வாசிக்காமல் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதேபோன்று எதிர்க்கட்சிகள் ஆளும் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும், அரசின் உரையை அம்மாநில ஆளுநர்கள் புறக்கணித்தனர். இதனால் மாநில நிர்வாகத்திற்கு ஆளுநர்கள் அவசியமா? என அரசியல் கட்சியின் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

முதலமைச்சர் அளித்த வாக்குறுதி

ஆளுநர்களின் செயல்பாடு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “ முதலில் தமிழ்நாடு. பின் கேரளா. இப்பொழுது கர்நாடகா. இந்த நடைமுறை மிகவும் தெளிவானது மற்றும் திட்டமிடப்பட்டது. மாநில அரசுகள் தயாரித்துக் கொடுக்கும் உரையைப் படிக்க மறுப்பதன் மூலமும், கட்சி முகவர்களைப் போலச் செயல்படுவதன் மூலமும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆளுநர்கள் சிறுமைப்படுத்துகின்றனர்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, இதற்கு இருக்கும் ஒரே தீர்வு, ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான். இந்த வழக்கற்றுப் போன மற்றும் தேவையற்ற நடைமுறையை ஒழிப்பதற்கான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே கொண்டு வர, இந்தியா முழுவதும் உள்ள ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்து தி.மு.க நடவடிக்கை எடுக்கும்” என தெரிவித்து இருந்தார்.

தமிழ்நாடு எம்.பிக்களின் திட்டம் என்ன?

அந்த வகையில் சட்டப்பேரவைகளில் ஆண்டின் முதல் கூட்டத்தொடரை, ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டும் என்ற விதியை திருத்தி அமைப்பது தொடர்பான மசோதாவை கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து திமுக இந்த கூட்டத்தொடரில் முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மட்டுமின்றி பஞ்சாப், மேற்குவங்கம் மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களும் இதற்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget