மேலும் அறிய
Mahindra Offers: 4 லட்சம் தள்ளுபடி.. XUV 3XO முதல் Thar வரை.. ஆஃபர்களை வாரி வழங்கிய மஹிந்திரா!
மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய எஸ்யூவி கார்களுக்கு ஜனவரி மாத தள்ளுபடியை அறிவித்துள்ளது.

தார் ராக்ஸ் கார்
Source : twitter
இந்தியாவின் பிரபலமான கார் நிறுவனம் மஹிந்திரா. எஸ்யூவி கார் என்றாலே மஹிந்திராதான் என்று சொல்லும் அளவிற்கு எஸ்யூவி கார்கள் தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
வாடிக்கையாளர்களின் நலன் கருதி மஹிந்திரா தனது கார்களுக்கு ஜனவரி மாத சலுகை அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் முடிய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், தற்போது இந்த சலுகையை அறிவித்துள்ளனர். எந்தெந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதை கீழே காணலாம்.
| கார் | வேரியண்ட் | தள்ளுபடி |
| XUV 3XO | MX2 / MX2 Pro | ரூபாய் 40 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அசெசரிஸ் தள்ளுபடி வரை |
| XUV 3XO | MX3 / MX3 Pro | ரூபாய் 50 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி மற்றும் ரூபாய் 25 ஆயிரம் அசெசரிஸ் தள்ளுபடி வரை |
| XUV 3XO | AX7L TGDi | ரூபாய் 60 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி மற்றும் ரூபாய் 20 ஆயிரம் அசெசரிஸ் தள்ளுபடி வரை |
| Bolero | B6 (O) | ரூபாய் 1 லட்சம் ரொக்கத் தள்ளுபடி மற்றும் ரூபாய் 20 ஆயிரம் வரை அசெசரிஸ் தள்ளுபடி |
| Bolero Neo | N10 / N10 Opt | ரூபாய் 95 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி மற்றும் ரூபாய் 30 ஆயிரம் அசெசரிஸ் தள்ளுபடி |
| Scorpio Classic | S / S11 | ரூபாய் 95 ஆயிரம் வரை ரொக்கத் தள்ளுபடி மற்றும் ரூபாய் 20 ஆயிரம் அசெசரிஸ் தள்ளுபடி |
| Scorpio-N (Petrol) | Z4 / Z8 / Z8L / Z8T | ரூபாய் 80 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி மற்றும் ரூபாய் 20 ஆயிரம் அசெசரிஸ் தள்ளுபடி |
| Scorpio-N (Diesel) | Z8 / Z8L / Z8T | ரூபாய் 10 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி மற்றும் ரூபாய் 10 ஆயிரம் அசெசரிஸ் தள்ளுபடி |
| XUV700 | AX5 / AX5 Select | ரூபாய் 1 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி மற்றும் ரூபாய் 30 ஆயிரம் அசெசரிஸ் தள்ளுபடி |
| XUV700 | AX7 / AX7L / Ebony | ரூபாய் 70 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி மற்றும் ரூபாய் 30 ஆயிரம் அசெசரிஸ் தள்ளுபடி |
| Thar | All variants | ரூபாய் 30 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி மற்றும் ரூபாய் 20 ஆயிரம் அசெசரிஸ் தள்ளுபடி |
| Thar Roxx | AX7L Diesel 4WD | ரூபாய் 1 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி மற்றும் ரூபாய் 20 ஆயிரம் அசெசரிஸ் தள்ளுபடி |
| XUV400 Pro EV | EL Pro | ரூபாய் 4 லட்சம் ரொக்கத் தள்ளுபடி |
ஜனவரி மாதம் முடிய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், இந்த சலுகையை மஹிந்திரா வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion




















