மேலும் அறிய

Ramadoss vs DMK | திருமாவுக்காக கைவிரித்த திமுக! குழப்பத்தில் ராமதாஸ்! சைலண்டாக இருக்கும் விஜய்

திருமாவளவனுக்காக திமுக ராமதாஸை கழற்றிவிட்டதாக பேச்சு அடிபடுகிறது. திமுக, அதிமுக, தவெக என எல்லா பக்கமும் முட்டுக்கட்டை போட்டுள்ளதால் ராமதாஸ் குழப்பத்தில் இருப்பதாக சொல்கின்றனர்.

பாமகவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே சண்டை முற்றி 2 தரப்பாக பிரிந்தனர். தேர்தல் ஆணையத்தின்படி தற்போது கட்சி அன்புமணி கையில் இருக்கிறது. அவர் முதல் ஆளாக அதிமுகவுடன் கூட்டணி வைத்து களத்தில் இறங்கிவிட்ட நிலையில், ராமதாஸ் தரப்பு பாமகவினருக்கு கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கிறது.

திமுக தரப்பில் இருந்து ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், கட்சியை கைப்பற்ற முடியாவிட்டால் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என கண்டிஷன் வைத்து ஜி.கே.மணி மூலமாக திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் தகவல் வெளியானது. ராமதாஸும் திமுக தலைமையிலான அரசை விமர்சிக்காமல் இருந்ததன் பின்னணியிலும் இந்த காரணமே இருப்பதாக பேச்சு இருந்தது.

ஆனால் ராமதாஸை கூட்டணிக்குள் கொண்டு வரக் கூடாது என்பதில் விசிகவினர் விடாப்பிடியாக இருந்தனர். இத்தனை காலமாக எதிர் எதிர் துருவங்களாக இருந்து விட்டு இப்போது கூட்டணி வைத்தால் விசிகவினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும் என சொன்னதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என்பதிலும் திருமாவளவன் உறுதியாக இருக்கிறார்.

அதனால் ராமதாஸா திருமாவளவனா என்று பார்க்கும் போது திருமாவுக்கே திமுக டிக் அடித்ததாக சொல்கின்றனர். ராமதாஸ் உடன் நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையையும் திமுக முடித்து கொண்டதாக பேச்சு அடிபடுகிறது. இந்தநிலையில் ராமதாஸ் திமுகவுக்கு எதிராக திடீரென பேசி வருவது அதன் அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. கல்விக்கடன் தள்ளுபடியில் திமுகவின் நிலைப்பாடு, அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என விமர்சனம் செய்துள்ளார்.

திமுகவின் கழற்றிவிட்டதால் அடுத்தது என்ன என்று ராமதாஸ் தரப்பில் குழப்பத்தில் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அதிமுக கூட்டணியில் அன்புமணி இருப்பதால் அந்த பக்கம் போவதற்கும் ராமதாஸ் தரப்பு தயக்கம் காட்டுவதாக சொல்கின்றனர். அதேபோல் தவெகவிடம் இருந்தும் க்ரீன் சிக்னல் எதுவும் வரவில்லையாம். தவெகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் முடிவாகாத நிலையில், அதையெல்லாம் முடித்த பிறகு ராமதாஸ் கூட்டணியை பார்த்துக் கொள்ளலாம் என கிடப்பில் போட்டு வைத்துள்ளதாகவும் சொல்கின்றனர். இந்த நிலையில் கூட்டணி விவகாரத்தில் ராமதாஸ் தரப்பு என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பதாக குழப்பத்தில் இருப்பதாக பேச்சு இருக்கிறது. 

செய்திகள் வீடியோக்கள்

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
ABP Nadu Top 10, 10 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 10 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
" வேலை தேடும் இளைஞர்கள் , பெண்கள் தான் டார்கெட் " G - Pay -யில் லட்சக் கணக்கில் மோசடி
ஓடும் அரசு பஸ்சின் பின்னால் தொங்கிய பள்ளி மாணவர்! விழுப்புரத்தில் அதிர்ச்சி... வைரல் வீடியோ
ஓடும் அரசு பஸ்சின் பின்னால் தொங்கிய பள்ளி மாணவர்! விழுப்புரத்தில் அதிர்ச்சி... வைரல் வீடியோ

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget