மேலும் அறிய

Star Movie OTT Release: சர்ப்ரைஸாக ஓடிடியில் வெளியான கவினின் “ஸ்டார்” படம்.. எந்த ஓடிடி தளம் தெரியுமா?

Star Movie: திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் ஸ்டார் திரைப்படம் திடீரென இப்படி ஓடிடி தளத்தில் வெளியாகி இருப்பது கவின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிக்கவிருந்து பின் பல்வேறு காரணங்களால் அவர் விலகி கவின் நடித்து முடித்து, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சம்மர் ரிலீசாக சென்ற மாதம் வெளியான திரைப்படம் ஸ்டார்.

பாராட்டப்பட்ட கவின் நடிப்பு

கடந்த மே 10ஆம் தேதி வெளியான இப்படத்தினை ‘பியார் பிரேம காதல்’ படத்தை இயக்கிய இளன் இயக்கியிருந்தார். மலையாள நடிகர் லால், நடிகைகள் அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், நடிகர்கள் காதல் சுகுமாறன், லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் இசையில் பாடல்கள் மற்றும் படத்தின் ட்ரெய்லர் ஆகியவை ரிலீசுக்கு முன்னதாக கவனமீர்க்க, கடந்த மே 10ஆம் தேதி ஸ்டார் திரைப்படம் திரையரங்குகளில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.

கலவையான விமர்சனங்கள்

லிஃப்ட், டாடா படங்களின் மூலம் கவனமீர்த்த கவினின் நடிப்பு ஸ்டார் பட ட்ரெய்லரிலும் ரசிகர்களைக் கவர இப்படம் பெரும் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. நடிகனாக ஆசைப்படும் நாயகனின் வலி, ஆசை, கரடுமுரடனான பாதை, அப்பா - மகன் உறவு இவற்றை சுற்றிய கதையில், கவினின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றாலும், கதை ரசிகர்களை பெருமளவு ஈர்க்கத் தவறியது. எனினும் சுமார் 12 கோடி பட்ஜெட்டில் உருவான ஸ்டார் திரைப்படம், ரூ.20 கோடிகளுக்கு மேல் வசூலைக் குவித்தது.

ஓடிடி ரிலீஸ்

தற்போது படம் வெளியாகி 27 நாள்கள் கடந்துள்ள நிலையில், சத்தமில்லாமல் இன்று ஸ்டார் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் ஸ்டார் திரைப்படம் எந்தவித முன்னறிவிப்புகளுமின்றி, இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் திடீரென வெளியாகியுள்ளது. இந்நிலையில் கவின் ரசிகர்களை இந்த ஓடிடி வெளியீடு உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கவினின் அடுத்தடுத்த படங்களின் லைன் அப் மற்றொருபுறம் நம்பிக்கை தரும் வகையில் அமைந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் ஹிட் அடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கவின் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநரான விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் உச்ச நடிகையான நயன்தாரா ஜோடியாக நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் கவின் நடிக்கும் ப்ளடி பெக்கர் படம் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா ஜோடியாக கவின் நடிக்கும் மாஸ்க் படம் ஆகியவற்றின் அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Embed widget