SS Rajamouli-Mahesh Babu: ‛மகேஷ் பாபுவுடன் இணைகிறேன்.. மேடையில் அறிவித்த ராஜமெளலி!
இயக்குநர் ராஜமெளலி அடுத்ததாக மகேஷ்பாபுவுடன் இணைய இருக்கிறார்.
இயக்குநர் ராஜமெளலி அடுத்ததாக மகேஷ்பாபுவுடன் இணைய இருக்கிறார்.
ஆர்.ஆர்.ஆர் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி தெலுங்கு பிரின்ஸ் என ரசிகர்களால் அழைக்கப்படும் மகேஷ் பாபுவுடன் இணைய இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வெளியாகமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது கனடாவில் நடந்து கொண்டிருக்கும் டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவிற்கு சென்றுள்ள இயக்குநர் ராஜமெளலி இப்படம் குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து மேடையில் பேசிய அவர், “ நான் அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைய இருக்கிறேன். அந்தப்படம் ஆக்சன் மற்றும் சாகசம் நிறைந்த படமாக இருக்கும். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இந்தப்படம் ஜேம்ஸ் பாண்ட், இந்தியானா ஜோன்ஸ் படங்கள் போல இந்திய கலாச்சாரத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.
இந்தப்படம் குறித்து ராஜமெளலியின் தந்தை விஜேந்திரபிரசாத் பிங்க் வில்லா செய்தி நிறுவனத்திடம் பேசும் போதும், “ இந்தப்படம் ஆப்பிரிக்க காடுகளில் நடக்கும் சாகசங்களை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது.
View this post on Instagram
ஆக்சன், த்ரில்லர், ட்ராமா என அனைத்தும் இந்தப்படத்தில் இருக்கும். இந்தப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
View this post on Instagram
இந்தப்படம் இந்த வருட இறுதியில் வெளியாகுமென அறிவிக்கப்பட்ட நிலையில், மகேஷ்பாபு திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் SSMB28 படத்தில் பிசியாக இருப்பதால் ராஜமெளலியின் படம் அடுத்த வருடத்திற்கு தள்ளிப்போகியுள்ளது.” என்று பேசியுள்ளார்.