Salaar: ஒரே படத்துக்காக 5 மொழிகளில் பேசி அசத்தும் ஸ்ருதி ஹாசன்
சலார் படத்துக்காக 5 மொழிகளில் பின்னணி குரலில் பேசி அசத்திய ஸ்ருதி ஹாசன்
![Salaar: ஒரே படத்துக்காக 5 மொழிகளில் பேசி அசத்தும் ஸ்ருதி ஹாசன் Sruthi Haasan is dubbing for her character in Tamil, Telugu and Hindi versions of the Salaar film Salaar: ஒரே படத்துக்காக 5 மொழிகளில் பேசி அசத்தும் ஸ்ருதி ஹாசன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/28/7ad82f8b62997e7c6c329511190ef20c1693225784649102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
’சலார் - பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் தமிழ், கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வசனம் பேசி அசத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 7ம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ருதி ஹாசன், இசைக் கலைஞர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகை என பன்முகங்களில் ஆளுமையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், 'சலார்' படத்தில் நடித்துள்ளார். யாஷ் நடித்த 'கே ஜி எஃப்' எனும் பிரம்மாண்ட வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் சலார் - பார்ட் 1 சீஸ்ஃபயர்'.
இதில் பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ் சுகுமாரன், ஜெகபதிபாபு, டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் சலார் ப்டம் வரும் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியன்று திரைக்கு வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சலார் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் ஹீரோயினாக நடித்திருக்கு ஸ்ருதி ஹாசன், தன் கேரக்டருக்கு அவரே சொந்த குரலில் பின்னணியில் பேசியுள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளிலும் பேசி அசத்தியுள்ளார்.
சலார் படத்தை தொடர்ந்து ’ஹாய் நான்னா', மற்றும் 'தி ஐ' என்ற தெலுங்கு மற்றும் ஆங்கில படங்களில் ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். முன்னதாக ஸ்ருதிஹாசன் நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான 'வீரசிம்ஹ ரெட்டி', 'வால்டேர் வீரய்யா' எனும் இரண்டு தெலுங்கு படங்களும் ரூ.100 கோடி மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
மேலும் படிக்க: Jason Sanjay: தந்தை வழி அல்லாமல் தாத்தா வழி செல்லும் தளபதி மகன்: விஷயம் இதுதான்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)