மேலும் அறிய

Oru Naal Oru Kanavu: கஜூராஹோ கனவில் ஓர் சிற்பம்.. ஸ்ரீகாந்த் - சோனியா அகர்வாலின் ஸ்வீட் காதல்.. 'ஒரு நாள் ஒரு கனவு' வெளியான நாள்!

ஃபகத் ஃபாசிலின் தந்தையான ஃபாசில் இயக்கிய திரைப்ப்படம் ‘ஒரு நாள் ஒரு கனவு’ . ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால் நடித்த இப்படத்தின் பாடல்களை நம்மால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

இப்போதெல்லாம் நமக்கு ஒரு படம் பிடித்து அந்த மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதற்காக சண்டைபோட்டு வாதாடுகிறோம். பெரிய அளவில் வெளியே தெரியாமல், நமக்கு பிடித்த ஒரு படத்தை யாரோ ஒரு அந்நியர் தனக்கும் அந்தப் படம் பிடிக்கும் என்று சொல்லும்போது வரும் ஒரு மகிழ்ச்சி இப்போதெல்லாம் கிடைப்பதில்லை. அப்படியான ஒரு படம்தான் ‘ஒரு நாள் ஒரு கனவு’. இன்றுடன் இந்தப் படம் வெளியாகி 18 ஆண்டுகள் ஆகின்றன. 

ஒரு நல்ல கதை

சின்ன வயதில் இருந்தே உழைத்து மட்டுமே பழகி உழைப்பை மட்டுமே நேசித்துப் பழகி தனது குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்பதையே தனது லட்சியமாகக் கொண்ட ஒரு கதாநாயகன் (ஸ்ரீகாந்த்). வாழ்க்கையில் எல்லா வசதிகளும் கிடைத்தும் எந்த விதமான உறவுகளின் பாசமும் கிடைக்காத ஒரு கதாநாயகி சோனியா அகர்வால்) . இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் வருகிறதென்றால் அதில் என்ன என்ன பிரச்னைகள் எல்லாம் வரும் என்பதை மிக நேர்மையாக மிக எதார்த்தமான சொல்லியிருப்பார் இயக்குநர் ஃபாசில்.

இரு வேறு வாழ்க்கைச் சூழலில் வளர்ந்த இந்த இருவரும் தங்களது உணர்வுகளுக்கு நியாயமாக சண்டை போடுபவர்களாக இருக்கிறார்கள். தனது லட்சியத்தில் ஜெயிக்க தடையாக இந்தக் காதல் வந்துவிடுமோ என்கிற பயத்தில் நாயகனும், இவனைப் போன்ற ஒருவனின் குடும்பத்தில் தனக்கும் ஒரு இடம் கிடைக்காதா என்கிற ஏக்கத்தில் நாயகியும் என இருதரப்பினரின் நியாயங்களையும் திரைக்கதையில் சேர்த்திருப்பார் இயக்குநர்.

மற்றுமொரு கூடுதலான தகவல் இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பது.  “கஜூராஹோ கனவில் ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே...”, “காற்றில் வரும் கீதமே...” என ரசிக்கும்படியான மெட்டுக்களில் அமைந்த இப்படத்தின் பாடல்கள் டிவியில் ஒலிக்கும்போது இன்றும் நம்மை சேனலை மாற்ற விடாது. கதாநாயகியாக நடித்த சோனியா அகர்வால் தன் மென்சோக முகம் காட்டி இக்கதையில் நன்றாக பொருந்தியிருப்பார். அதேபோல் இயல்பாக குழந்தை சுபாவம் கூடிய ஒரு வாலிபனாக ஸ்ரீகாந்த் நடித்திருந்த கதாபாத்திரத்தில் நன்றாகவே பொருந்தியிருந்தார்

18 ஆண்டுகள் கழித்து நினைவுபடுத்திச் சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய படம் இல்லையென்றாலும் இன்னும் கொஞ்சம் பாராட்டுக்களைப் பெற்றிருக்கலாம். இதற்கெல்லாம் முக்கியமான காரணம் நாம் தான். அதனால் இனிமேல்  நமக்கு ஒரு படம் பிடித்து அது மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உடனே சண்டை செய்வோம்.

தலைப்பு செய்திகள்

Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget