Sonam Kapoor Watch Video : பப்ளிசிட்டிக்காக பண்றேனா..? மேக் -அப் போட்டுக்கொண்டு பாலூட்டிய பாலிவுட் நடிகை.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ..!
சோனம் கபூர் மேக் அப் போட்டு கொண்டே குழந்தைக்கு பாலூட்டும் வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இது தற்போது நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகைகளில் முன்னணி வகிக்கும் சோனம் கபூர் தற்போது தனது தாய்மையை நிலையை மிகவும் மகிழ்ச்சியோடு அனுபவித்து வருகிறார். ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் இந்த ஸ்டேஜ் மிகவும் உன்னதமானது. தன்னுடைய வசீகரமான தோற்றத்தாலும் கவர்ச்சியாலும் ஏராளமான ரசிகர்களை தன்னுடைய வலையில் விழ வைத்த பேரழகியாக வலம் வருகிறார்.
கடந்த 2018ம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை என்பவரை திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்த நடிகைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தான் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. வாயு என அந்த குழந்தைக்கு பெயரிட்டனர். அவ்வப்போது சோனம் கபூர் வாயுவின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வது வழக்கம்.
ஷூட்டிங்கில் சோனம் மிகவும் பிஸி :
தற்போது ஷோம் மகிஜா இயக்கத்தில் 'பிளைண்ட்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சோனம் கபூர். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிகவும் மும்மரமாக நடைபெற்று வருவதால் நடிகை சோனம் கபூர் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக உள்ளார். இந்த இளம் தாய் குழந்தை பிறந்த இரண்டாவது மாதம் முதலே ஷூட்டிங்கில் கலந்து கொள்ள தொடங்கிவிட்டாராம்.
View this post on Instagram
சோனம் கபூர் செய்த செயல் சரியா?
அவ்வப்போது போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பகிரும் சோனம் கபூர் தற்போது பகிர்ந்துள்ள ஒரு வீடியோ மிகவும் வைரலாக பரவி வருகிறது. அது இந்த அளவிற்கு வைரலாக காரணம் சோனம் கபூர் குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டே மேக் அப் போட்டு கொள்ளும் வீடியோ தான் அது. நடிகைகள் எந்த சமயத்திலும் அழகாக தங்களை காண்பித்து செய்து கொள்ள வேண்டும் என நினைப்பார்கள்.
சோனம் கபூர் ஒரு படி மேலே போய் பாலூட்டும் போது மேக் அப் குழு அவருக்கு மேக் அப் போடும் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இது நெட்டிசன்கள் மத்தியில் பப்ளிசிட்டிக்காக அவர் செய்கிறார் என்ற சில கேள்விகளை எழுப்பினாலும், ஒரு தாயாக அவர் பாராட்டப்பட வேண்டும். இப்படி பட்ட பிஸியான ஷெட்யூலிலும் குழந்தைக்கு பாலூட்ட வேண்டும் என்ற அந்த எண்ணம் பாராட்டப்பட வேண்டும். சிலர் இதை சர்ச்சையாக எண்ணினாலும் ஒரு சிலர் மேக் அப் போட்டு கொள்ளும் நேரத்திலும் குழந்தைக்கு பாலூட்ட நினைக்கும் அந்த உணர்வு தான் தாய்மை என அவரின் இந்த செயலை பாராட்டியும் வருகிறார்கள் சில ரசிகர்கள்.
ஐ லவ் யூ மும்பை :
சோனம் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து அதற்கு ஒரு அழகான குறிப்பையும் பதிவிட்டுள்ளார். "என்னுடைய குழுவுடன் ரியல் உலகத்திற்கு திரும்பியதில் மிகவும் சந்தோஷம். அழகாக டிரஸ் அப் செய்து மக்களை சந்திப்பதை மிகவும் விரும்புகிறேன். மீண்டும் எனது சொந்த ஊரான மும்பைக்கு திரும்பியுள்ளேன். ஐ லவ் யூ மும்பை என குறிப்பிட்டுள்ளார் சோனம் கபூர்.