தாமரை லிரிக்ஸ் போதும்னு சொல்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த ப்ளேலிஸ்ட்..!
பாடலாசிரியர் தாமரையின் வரிகளில் அமைந்த சிறப்பான பாடல்கள் என்னென்ன?
தமிழ் திரையுலகில் 1998ஆம் ஆண்டு கால் பதித்தவர் பாடல் ஆசிரியர் தாமரை. இவர் அப்போது முதல் தனக்கு என்று ஒரு பானி அமைத்து நல்ல வரிகளை கொடுத்து பாடல்களை வரிகள் மூலம் ஹிட் அடிக்கும் செய்து வந்தார். இவருடைய பாடல் வரிகள் அதிகம் ஹிட் அடித்து நடிகர் சூர்யாவிற்குத்தான். காக்க காக்க தொடங்கி கஜினி, வாரணம் ஆயிரம், 7ஆம் அறிவு எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவருடைய வரிகள் அமைந்த சிறப்பான பாடல்கள் என்னென்ன?
1. ஒன்றா இரண்டா ஆசைகள்:
சூர்யா-ஜோதிகா கூட்டணியில் அமைந்த வெற்றி திரைப்படம் காக்க காக்க. இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். ஹாரிஸ் ஜெயராஜின் இசை படத்திற்கு அதிக வலு சேர்த்திருக்கும். அத்துடன் தாமரையின் வரிகள் பாடல்களை ஹிட் அடிக்க வைத்திருக்கும்.
"பெண்களை
நிமிர்ந்து பார்த்திட
உன் இனிய கண்ணியம்
பிடிக்குதே கண்களை
நேரா பாத்து தான் நீ பேசும்
தோரணை பிடிக்குதே...."
2. ஒரு மாலை:
சூர்யாவிற்கு தாமரை எழுதிய மற்றொரு சிறப்பான பாடல் இது. கஜினி திரைப்பட்டத்தில் சுற்றும் விழி சுடரே மற்றும் ஒரு மாலை சிறப்பான பாடல்களாக அமைந்திருக்கும். ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கும். பாடலின் வரிகள் அவ்வளவு அழகாக இருக்கும்.
"பேசும் அழகினை
கேட்டு ரசித்திட பகல் நேரம்
மொத்தமாய் கழித்தேனே
தூங்கும் அழகினை பாா்த்து
ரசித்திட இரவெல்லாம் கண்
விழித்து கிடப்பேனே பனியில்
சென்றால் உன் முகம் என் மேலே
நீராய் இறங்கும் ஓ தலை சாய்த்து
பாா்த்தேனே தடுமாறி போனேனே..."
3. நெஞ்சுக்குள் பெய்திடும்:
சூர்யா- தாமரை கூட்டணியில் அமைந்த மற்றொரு வெற்றிப் பாடல் இது. இந்தப் பாடத்தில் வந்த பாடல் அனைத்தும் பெரியளவில் ஹிட் அடித்தது. அதில் இந்தப் பாடல் சிறப்பாக இருக்கும். குறிப்பாக இதன் வரிகள் காதல் தொடர்பாக அழகாக இருக்கும்.
"என்னோடு வா வீடு
வரைக்கும் என் வீட்டை பாா்
என்னை பிடிக்கும் இவள் யாரோ
யாரோ தொியாதே இவள் பின்னால்
நெஞ்சே போகாதே
இது பொய்யோ
மெய்யோ தொியாதே
இவள் பின்னால் நெஞ்சே
போகாதே போகாதே..."
4. கண்ணான கண்ணே:
அஜித் நடிப்பில் இமான் இசையில் வெளியான படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் தந்தை-மகள் உறவை பறைசாற்றும் வகையில் இருக்கும். இந்தப் பாடல் வரிகளை தாமரை அழகாக எழுதியிருப்பார். சித் ஶ்ரீராம் சிறப்பாக பாடியிருப்பார்.
"விண்ணோடும் மண்ணோடும் வாடும்
பெரும் ஊஞ்சல் மணதோரம்
கண்பட்டு நூல் விட்டு போகும்
எனை ஏதோ பயம் கூடும்..."
5. தள்ளி போகாதே:
நடிகர் சிம்பு நடிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான திரைப்படம் அச்சம் என்பது மடமையடா. இந்தப் படத்தில் தாமரை வரிகளில் அமைந்த சிறப்பான பாடல் இது. திரைப்படம் வெளியே வருவதற்கு முன்பாக ஹிட் அடித்த பாடல் இதுவாகும்.
"நகரும் நொடிகள்
கசையடிப் போலே முதுகின்
மேலே விழுவதினாலே
வாி வாிக் கவிதை எழுதும்
வலிகள் எழுதா மொழிகள் எனது..."
இவை தவிர பல ஹிட் பாடல்களை தாமரை தனது அழகான வரிகள் மூலம் தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார். அவற்றை பட்டியல் இட ஒருநாள் போதாது.
மேலும் படிக்க: மனதை கரைய வைக்கும் பிரதீப் குமாரின் ப்ளேலிஸ்ட் !