சிந்துவின் வெற்றியை கொண்டாடும் ‛சிந்து’ பாடல்கள் கேட்டு மகிழுங்கள்!
தமிழ் சினிமாவில் சிந்து என்ற வரிகள் கொண்ட பாடலகள் என்னென்ன தெரியுமா
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். காலிறுதிச் சுற்றில் தன்னைவிட தரவரிசையில் முன்னிலையில் உள்ள வீராங்கனையை சிந்து தோற்கடித்துள்ளார். மேலும் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகளில் அரையிறுதிக்கு சிந்து முன்னேறியுள்ளார். இந்தச் சூழலில் சிந்துவின் வெற்றியை கொண்டாடும் வகையில் தமிழ் சினிமாவில் வெளியான சிந்து என்ற வரிகள் கொண்ட பாடல்கள் என்னென்ன தெரியுமா?
1. சிந்து நதியின் மிசை நிலவினிலே:
சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான கை கொடுத்த தெய்வம் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். பாரதியாரின் வரிகளை டிஎம்.எஸ் மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் பாடியிருப்பார்கள். இதற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருப்பார்கள்.
"கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்..."
2. தேன் சிந்துதே வானம்:
சிவக்குமார் நடிப்பில் வெளியான பொண்ணுக்கு தங்க மனசு திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இளையராஜா இசையில் எஸ்பிபி மற்றும் ஜானகி பாடியிருப்பார்கள். இந்தப் பாட்டின் வரிகளும் அவ்வளவு அழகாக அமைந்திருக்கும்.
"பன்னீரில் ஆடும் செவ்வாழை கால்கள்
பனிமேடை போடும் பால் வண்ண மேனி
பனிமேடை போடும் பால் வண்ண மேனி
கொண்டாடுதே சுகம் சுகம்…….
பருவங்கள் வாழ்க..."
3. சிந்து நதி செம்மீனே:
கார்திக்,சௌந்தர்யா நடிப்பில் வெளியான 'பொன்னுமணி' திரைப்படத்தில் இந்தப் பாடல் இருக்கும். இப்பாடலை இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடியிருப்பார்.
"காக்கை சிறகிலே
தீண்டி கதைகள் நூறு
கூறவா பாசம் வைத்த
பால் நிலாவை கையில்
நானும் ஏந்தவா
மாமன் தொட்ட
பூந்தேரே மனதில் நீயும்
ஏங்காதே ஏக்கத்தோடு
நீ போனால் ஏழை
நெஞ்சு தாங்காதே..."
4. சிந்திய வெண்மணி:
விஜய்காந்த்,ராதிகா நடிப்பில் வெளியான பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் இந்தப் பாடல் அமைந்திருக்கும். இப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருப்பார். இப்பாடலை கே.ஜே.யேசுதாஸ் மற்றும் சுஷீலா ஆகியோர் பாடியிருப்பார்கள். இப்பாடலின் வரிகளும் அழகாக இருக்கும்.
"தாய் தந்த பாசம்
தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும்
அன்பே அன்பே
காலங்கள்
போற்றும் கைதந்து
காக்கும் என் பிள்ளை
தன்னை இங்கே இங்கே
வீட்டுக்கும்
நாட்டுக்கும் நான்
பாடும் பாட்டுக்கும்.."
5. நான் ஒரு சிந்து :
சிவக்குமார், சுஹாசினி நடிப்பில் வெளியான சிந்து பைரவி திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இப்பாடலுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பார். சின்னகுயில் சித்ராவின் குரலில் இப்பாடல் அமைந்திருக்கும்.
" என் விதி அப்போதே
தெரிஞ்சிருந்தாலே கர்ப்பத்தில்
நானே கரைஞ்சிருப்பேனே
தலை எழுத்தென்ன என்
மொதல் எழுத்தென்ன
தலை எழுத்தென்ன மொதல்
எழுத்தென்ன சொல்லுங்களேன்..."
இவ்வாறு தமிழ் சினிமாவில் சிந்து என்ற வரிகளுடம் பல பாடல்கள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராதே ஷ்யாம்.. ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு..!