மேலும் அறிய

Silk Smitha: சாவித்திரி போல் சாதிக்க ஆசை.. ஆங்கிலோ இந்தியரிடம் க்ளாஸ்.. சில்க் ஸ்மிதா நினைவலைகள்!

Silk Smitha: சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளான இன்று அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமானத் தகவல்களை பார்க்கலாம்...

80'ஸ் - 90 'ஸ் காலகட்டத்தை தன கைவசமாக்கி சுமார் 17 ஆண்டுகால திரைப்பயணத்தில் ஆண்டுக்கு 20 படங்கள் என்ற எணிக்கையில் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஆட்டத்தை முடித்துக் கொண்டவர் நடிகை சில்க் ஸ்மிதா (Actress Silk Smitha). குறுகிய கால ஆட்டம் என்றாலும் இன்றும் தென்னிந்திய சினிமா அவரை நினைவு கூறுகிறது என்பது அவருக்கே சொந்தமான தனிச்சிறப்பு. அந்த அழியா நட்சத்திரம் பிறந்த தினமான இன்று அவர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம். 

* தென்னிந்திய சினிமாவில் ஹீரோயின்களுக்கு நிகரான ஒரு நடிகையாக புகழின் உச்சியில் இருந்த சில்க் ஸ்மிதா, படித்தது நான்காம் வகுப்பு வரையில் மட்டுமே. உறவினர் வீட்டுக்கு வந்த இடத்தில் நடிகர் வினு சக்கரவர்த்தி மூலம் கிடைத்தது முதல் சினிமா வாய்ப்பு. 

Silk Smitha: சாவித்திரி போல் சாதிக்க ஆசை.. ஆங்கிலோ இந்தியரிடம் க்ளாஸ்.. சில்க் ஸ்மிதா நினைவலைகள்!

* தயாரிப்பாளர்கள், கதாநாயகர்கள் என பலரும் சில்க் ஸ்மிதாவிற்காக காத்திருந்த காலங்களும் உண்டு. முதலில் அவரின் கால்ஷீட் கிடைத்த பிறகு தான் தயாரிப்பாளர் ஹீரோயினையே ஒப்பந்தம் செய்வார்களாம்.

* சில்க் ஸ்மிதாவின் கவர்ந்து இழுக்கும் கண்கள், தமிழனுக்கே உரித்தான நிறம், சொக்கவைக்கும் தோற்றமே அவரை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது. 

*தன்னுடைய உடைகளைத் தேர்ந்தெடுப்பது, அதற்கான நகைகளை தேர்வு செய்வது, நடக்கும் ஸ்டைல், உடுத்தும் ஸ்டைல் என அனைத்தையும் அவரே கலைநயத்துடன் தேர்ந்து எடுப்பாராம். 

*அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் சிறத குணச்சித்திர நடிகையாக  தன்னை வெளிப்படுத்திய சில்க் ஸ்மிதா, 'அன்று பெய்த மழை' படத்தில் நடித்ததன் மூலம் தன்னுடைய பன்முக நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

* 'வண்டிச்சக்கரம்' என்ற தமிழ் படம் மூலம் அறிமுகமான சில்க் ஸ்மிதாவுக்கு மலையாள படங்களில் நடிக்கவே அதிகம் விருப்பமாம். அதற்கு காரணம் மலையாள திரையுலகில் அவருக்கு நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டது தான். 

Silk Smitha: சாவித்திரி போல் சாதிக்க ஆசை.. ஆங்கிலோ இந்தியரிடம் க்ளாஸ்.. சில்க் ஸ்மிதா நினைவலைகள்!

*சில்க் ஸ்மிதா நடித்த படங்களில் அவருக்காக முழுக்க முழுக்க டப்பிங் பேசியது ஹேமமாலினி தான். அந்த அளவிற்கு இருவரின் குரலுக்கும் ஒற்றுமை இருக்கும். 

* சில்க் ஸ்மிதாவுக்கு மிகவும் பிடித்த நடிகை சாவித்திரி. அவரை போலவே நடிப்பில் சாதிக்க வேண்டும் என ஆசைப்பட்டவர் சில்க் ஸ்மிதா. அவருக்கு நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டுள்ளார் ஆனால் சினிமா அவரை வெறும் போதை தரும் கவர்ச்சி பொருளாகவே கடைசி வரை பார்த்தது.  

* சென்னை வடபழனியில் உள்ள குமரன் காலனியில் தான் சில்க் ஸ்மிதா வசித்து வந்தார். அந்த ஏரியா குழந்தைகளுடன் மிகவும் பாசமாக பழகக்  கூடியவர். அத்தனை பெரிய செலிபிரிட்டியாக இருந்த போதிலும் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு நடந்தே மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகளை வாங்கும் பழக்கம் கொண்டிருந்தார். 

* 35 வயதிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த திரையுலகுக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட எமோஷனலாகும் அவரின் குணம் தான் தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

* ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என அலாதியான ஆசை கொண்டு இருந்த சில்க் ஸ்மிதா, அதற்காக ஆங்கிலோ இந்தியன் ஒருவரை ஏற்பாடு செய்து சரளமான ஸ்டைலாக பேச கற்றுக்கொண்டார். 

* அனைத்து தலைமுறை இளைஞர்களின் கனவுக்கன்னியாக கொண்டாடப்பட்ட சில்க் ஸ்மிதா, தமிழ்நாட்டின் மார்லின் மன்றோவாகவே பார்க்கப்பட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget