ABP Exclusive: வருமானம்.. பிக்பாஸ்.. உண்மைகள்.. மனம் திறந்த சினேகன்..!
அவர்கள் வருமானத்திற்காக ஏதாவது ஒரு பிரச்னையை உருவாக்கி நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். அது தெரியாமல் வலைதளவாசிகள் சமூகவலைதளங்களில் அடித்துக்கொள்கிறார்கள்.
பிரபல பாடலாசிரியரும், நடிகருமான கவிஞர் சினேகன் நந்தா பெரியசாமி இயக்கத்தில் வெளியாகியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் 5 பாடல்களை எழுதியதோடு நடிக்கவும் செய்திருக்கிறார். இது தொடர்பாகவும், இன்ன பிற விஷயங்கள் குறித்தும் அவரிடம் ஏபிபி நாடு பிரேத்யகமாக பேட்டி எடுத்தது. அந்தப் பேட்டியில் அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்களை பார்க்கலாம்.
திருமணம் ஆகிவிட்டது.. சினேகனிடம் ஏற்பட்ட எந்த மாற்றம் அவருக்கே பிடித்திருக்கிறதா?
கோபப்படுறது குறைஞ்சுருக்கு.. நான் பயங்கர கோபக்காரன்.. அந்தக் கோபத்த குறைக்கிற இடத்துல அவங்க வந்துருக்காங்க.. கோபத்துல யாருக்கும் மெசஜ் அனுப்பாத .. நான் இருக்கேன்.. என்ன திட்டு.. நம்ம சமாதானம் ஆகிக்கலாம் என்று சொல்கிறாள்.. அவள் வந்தபிறகுதான் இந்தப் பக்குவம் வந்திருக்கிறது. எனக்கு இது புதிதாய் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி, எனக்காக ஒருவர் இருக்கிறார் என்ற ஃபுல்பில்மெண்ட் வந்திருக்கு..
நீங்கள் இருவரும் சேர்ந்து வெளியிடும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரல் ஆகிறதே?
ஆமாம். அதுவும் அவர்தான் செய்கிறார். அந்த வீடியோக்களை பார்க்கும் பலர் இந்தப் பாடல்களையெல்லாம் நீங்களா எழுதீனீர்களா என்று கேட்கின்றனர். அப்போது.. எனக்கு இவ்வளவு நாள் இதெல்லாம் தெரியாமல்தான் சினேகனை பார்த்துக்கொண்டிருக்கீறீர்களா என்று தோன்றும்.
அப்போது நான் அவரிடம் ஏன் இதையெல்லாம் செய்கிறாய் என்று கேட்பேன்.. அப்போது அவர், மாமா உனக்கு உன்னை விளம்பரம் செய்யவும் தெரியவில்லை என்று திட்டுவாள். ஆனால் ஒன்றில் மட்டும் நான் தெளிவாக இருக்கிறேன்.. என்னால் அவள் காயப்பட்டு விடக்கூடாது.
ஆனந்தம் விளையாடும் வீடு எந்த அளவுக்கு ஸ்பெஷல்?
5 பாடல்களையும் எனக்கு கொடுக்க வேண்டும் என்று நான் அவரிடம் கேட்கவில்லை. நந்தா பெரியசாமி எனக்கு நீண்ட நாள் நண்பர்.அவர் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகதான் நான் ஒத்துக்கொண்டேன்.
பிக்பாஸ் பார்ப்பதுண்டா?
எப்பவாவது பார்ப்பதுண்டு. என்னுடைய எபிசோடை நான் பார்ப்பதில்லை. அதைப் பார்த்தால் எனக்கு கோபம் வரும். அதில் என்னைப் பற்றி ஏதாவது தவறாக வந்தால் வருத்தப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஒரு கட்டத்தில், கன்னிகாவுக்கும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவள் இதை என்னிடம் வந்து சொல்ல, விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் மனமிருந்தால் தாராளமாக செல் என்றேன்.
இன்னொன்று அவர்கள் வருமானத்திற்காக ஏதாவது ஒரு பிரச்னையை உருவாக்கி நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். அது தெரியாமல் வலைதளவாசிகள் சமூகவலைதளங்களில் அடித்துக்கொள்கிறார்கள்.
ஸ்டாலின் ஆட்சி எப்படியிருக்கிறது?
ஸ்டாலின் ஆட்சி தற்போதைக்கு நன்றாக இருக்கிறது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின்னரும் இந்த ஆட்சி இப்படியே தொடர வேண்டும்.. நடக்குமா என்று பார்ப்போம்
முழு வீடியோ பார்க்க...