மேலும் அறிய

“நான் கமலின் தீவிர ஃபேன்; அவர் சொன்னதால் அதை செய்தேன்” - நடிகை தேவயானி ஓப்பன் டாக்..

வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் தான் தனக்கு ரசிகர்களிடமிருந்து அன்பும், ஆதரவும் கிடைத்தது என்று நடிகை தேவயானி கூறியுள்ளார்.

வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் தான் தனக்கு ரசிகர்களிடமிருந்து அன்பும், ஆதரவும் கிடைத்தது என்று நடிகை தேவயானி கூறியுள்ளார்.

90களில் கொடிகட்டிப் பறந்த நடிகைகளில் தேவயானி மிகவும் முக்கியமானவர். தற்போது தமிழ்சினிமாவின் டாப் ஹீரோக்களாக இருக்கும் அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் முதல் ரிட்டயர்ட் ஆகிவிட்ட நடிகர்கள் வரை, ரஜினி தவிர கிட்டத்தட்ட அத்தனை முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்தவர் தேவயானி. கிளாமர் இல்லாத, எதார்த்தமான நடிப்பு போன்ற காரணங்களால் நகரம் முதல் கிராமம் வரை அத்தனை தரப்பினரிடமும் சென்று சேர்ந்தவர் தேவயானி. அவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், தன் வாழ்வின் சில முக்கியமான தருணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“நான் கமலின் தீவிர ஃபேன்; அவர் சொன்னதால் அதை செய்தேன்” - நடிகை தேவயானி ஓப்பன் டாக்..

வெள்ளித்திரையில் டாப் ஹீரோயின்:

வெள்ளித்திரையில் கொடிகட்டிப் பறந்த தேவயானி காலப்போக்கில் சின்னத்திரையில் தடம்பதித்து அதிலும் தற்போது முன்னணி இடத்தைப் பிடித்திருக்கிறார். இந்த மாற்றம் குறித்து தேவயானியிடம் கேட்டபோது, வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்தது மிகவும் எளிதாக இருந்தது. கிளாமர் இல்லாமல் குடும்பப் பெண் கதாப்பாத்திரங்களில் நடித்தது பெண்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைக் கொடுத்திருந்தது. அதனால், சின்னத்திரைக்கு வந்ததும் பெண்கள் என்னை எளிதாக ஏற்றுக்கொண்டார்கள். எனக்கு அன்பும் ஆதரவும் அதிகம் கிடைத்தது வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் தான் என்று கூறினார்.

“நான் கமலின் தீவிர ஃபேன்; அவர் சொன்னதால் அதை செய்தேன்” - நடிகை தேவயானி ஓப்பன் டாக்..

குடும்ப பயணம் குறித்த நினைவுகள்:

அவரது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் குறித்து கேட்டபோது,  மும்பை பயணத்திற்காக  ஃப்ளைட்டில் அம்மா, அப்பா, நகுல் அவரது மனைவி எல்லோரும் ப்ளைட்டில் சென்றபோது விமான நிலையத்தில் எடுத்த புகைப்படம் அது. நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் மும்பை தான். இங்கு வந்துவிட்ட பிறகு முதல் முறையாக மும்பை சென்றோம். அம்மா, அப்பாவுடன் சென்ற கடைசி பயணமாக அது இருந்தது. இந்த பயணத்திற்குப் பிறகு இருவரும் இறந்துவிட்டனர் என்று தேவயாணி கூறினார்.

“நான் கமலின் தீவிர ஃபேன்; அவர் சொன்னதால் அதை செய்தேன்” - நடிகை தேவயானி ஓப்பன் டாக்..

அந்த பேட்டியில், காதல் கோட்டை திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி படப்பிடிப்பு பற்றி பகிர்ந்து கொண்ட தேவயானி அந்த காட்சி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்றும், அந்த காட்சி சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் எடுத்தது என்றும் கூறினார்.

கமல் பற்றி தேவயானி:

பஞ்சதந்திரத்தில் கமல்ஹாசனுடனான காட்சி குறித்து பகிர்ந்து கொண்ட தேவயானி, அந்த காட்சி சிறிது தான் என்றாலும் தன்னால் மறக்க முடியாத காட்சியாக இருந்தது. அந்த காட்சிக்கு டப்பிங் நீங்கள் தான் கொடுக்க வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியதாக அவர் கூறினார். மேலும்,  கமல்ஹாசனின் தீவிர ரசிகை நான் என்று கூறிய தேவயானி கமல்ஹாசன் நீண்ட நாள்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று கூறினார். ஃப்ரெண்ட்ஸ் திரைப்படம் பற்றி கூறுகையில், “ஃப்ரெண்ட்ஸ் திரைப்படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படம். படத்தைப் போலவே ஷூட்டிங் ஸ்பாட்டிலும் வடிவேலுவால் ஒரே சிரிப்பலையாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

“நான் கமலின் தீவிர ஃபேன்; அவர் சொன்னதால் அதை செய்தேன்” - நடிகை தேவயானி ஓப்பன் டாக்..

ரஜினியுடன் ஏன் நடிக்கவில்லை:

முன்னதாக,  27 வருடங்களாக ரஜினிகாந்த் திரைப்படங்களில் ஏன் நடிக்க வில்லை என்பதை பற்றி பேசியிருந்த தேவயானி, ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் தகுந்த கதாபாத்திரத்திம் தனக்கு கிடைக்கவில்லை என்றும் அவரின் திரைப்படத்திற்கு நான் தேவை இல்லை போல என்றும் வருத்தமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Salem Leopard: வனத்துறையிடம் எட்டு நாட்களாக சிக்காத சிறுத்தை - பீதியில் சேலம் மக்கள்
Salem Leopard: வனத்துறையிடம் எட்டு நாட்களாக சிக்காத சிறுத்தை - பீதியில் சேலம் மக்கள்
'தமிழகத்தில் போதை மாத்திரை சர்வ சாதரணமாக கிடைக்கிறது” - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு !
'தமிழகத்தில் போதை மாத்திரை சர்வ சாதரணமாக கிடைக்கிறது” முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு !
குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு
இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Anti Caste Marriage | சாதி மறுப்பு திருமணம் சூறையாடப்பட்ட CPIM OFFICE நெல்லையில் பரபரப்பு!Manjolai Estate | சரிந்தது 95 ஆண்டுகால சாம்ராஜ்யம் உருக்கும் இறுதி நிமிடங்கள்! கண்ணீரில் மாஞ்சோலைLeopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Salem Leopard: வனத்துறையிடம் எட்டு நாட்களாக சிக்காத சிறுத்தை - பீதியில் சேலம் மக்கள்
Salem Leopard: வனத்துறையிடம் எட்டு நாட்களாக சிக்காத சிறுத்தை - பீதியில் சேலம் மக்கள்
'தமிழகத்தில் போதை மாத்திரை சர்வ சாதரணமாக கிடைக்கிறது” - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு !
'தமிழகத்தில் போதை மாத்திரை சர்வ சாதரணமாக கிடைக்கிறது” முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு !
குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு
இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு
Breaking News LIVE: சென்னையில் கடைக்குள் புகுந்து ரகளை - 2 பேருக்கு அரிவாள் வெட்டு
Breaking News LIVE: சென்னையில் கடைக்குள் புகுந்து ரகளை - 2 பேருக்கு அரிவாள் வெட்டு
Uttarakhand Accident:  ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் கவிழ்ந்த வேன்.. இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல்..!
ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் கவிழ்ந்த வேன்.. இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல்..!
”விஷ்ணு வந்தார்” புத்தகத்திற்காக யுவ புரஸ்கார் விருது..  தமிழ்நாட்டை சேர்ந்த லோகேஷ் ரகுராமனுக்கு அறிவிப்பு!
”விஷ்ணு வந்தார்” புத்தகத்திற்காக யுவ புரஸ்கார் விருது.. தமிழ்நாட்டை சேர்ந்த லோகேஷ் ரகுராமனுக்கு அறிவிப்பு!
Central Budget FY25: ஜுலை 22ம் தேதி மத்திய அரசின் விரிவான பட்ஜெட்  தாக்கல் - தகவலும், எதிர்பார்ப்பும்..!
Central Budget FY25: ஜுலை 22ம் தேதி மத்திய அரசின் விரிவான பட்ஜெட் தாக்கல் - தகவலும், எதிர்பார்ப்பும்..!
Embed widget