Maaveeran Trailer: அப்படி போடு..! ஜுலை 2ம் தேதி வெளியாகிறது சிவகார்த்திகேயனின் மாவீரன் டிரெய்லர்..
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தின் டிரெய்லர் ஜுலை 2ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தின் டிரெய்லர் ஜுலை 2ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
We have seen your unwavering support, and now it's time to reward your patience. 💪🏼🔥@Siva_Kartikeyan ‘s Maaveeran Directed by @madonneashwin #MaaveeranTrailerFromJuly2nd #MahaveeruduTrailerFromJuly2nd#Maaveeran #Mahaveerudu @AditiShankarofl @bharathsankar12 @iamarunviswa… pic.twitter.com/2YB5CoTn8Z
— Shanthi Talkies (@ShanthiTalkies) June 30, 2023
இதுதொடர்பாக, மாவீரன் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம், சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் பொறுமைக்கு பரிசளிக்கும் விதமாக வரும் 2ம் தேதி மாவீரன் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவீரன்:
ப்ரின்ஸ் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் வெளியாக உள்ளது. மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கியிருக்கும் அடுத்த திரைப்படம் மாவீரன். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா வரும் ஜூலை 2ஆம் தேதி சென்னை, தாம்பரத்தில் உள்ள சாய் கல்லூரியில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது அதே நிகழ்ச்சியில் படத்தின் டிரெய்லரும் வெளியாகும் என அறிவித்துள்ளது.
படக்குழு:
சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அதிதி, மிஷ்கின், யோகிபாபு, சரிதா ஆகியோரின் ஆஃப்ஸ்க்ரீன் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. இதற்கான முன்னோட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அடுத்தடுத்து அப்டேட்:
மாவீரன் படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் இரண்டு பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இதில் இரண்டாவது பாடலான ‘வண்ணாரப்பேட்டையில’ பாடலை சிவகார்த்திகேயன் - அதிதி சங்கர் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் சமூக வலைதளங்களில் ஹிட் அடித்துள்ளது. மேலும் இப்படத்தின் டைட்டில் டீசரும் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 'எதிர்த்து நின்றான்' எனும் கேப்ஷனுடன் சிவகார்த்திகேயன் படங்களுடன் கூடிய காமிக்ஸ் வரைபடங்களும் இந்த டீசரில் காணப்பட்டன. இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி பெற்றுள்ளது. இந்நிலையில் மாவீரன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.
சிவகார்த்திகேயனின் அடுத்த படம்:
மாவீரன் படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் எஸ்.கே. 21 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் எஸ்.கேக்கு ஜோடியாக முதல் முறையாக இணைகிறார் நடிகை சாய் பல்லவி.