மேலும் அறிய

Sivakarthikeyan: என் இன்ஸ்பிரேஷன்.. நடிகர் சிவகார்த்திகேயனை புகழ்ந்து தள்ளிய பிரபல தெலுங்கு நடிகை!

இளம் நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா, நடிகர் சிவகார்த்திகேயனுடன் கல்லூரி மாணவர்கள் முன் நடனமாடியது வைரலாகி வருகிறது

சிவகார்த்திகேயனின் வாழ்க்கை தனக்கு மிகவும் இன்ஸ்பிரேஷனாக இருப்பதாக ஸ்ரீலீலா கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான அயலான் படத்தின் வெற்றி அவருக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்த் முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில், சாய் பல்லவி இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசைமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘எஸ்.கே 23’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கன்னட நடிகை ருக்மினி வசந்த் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்ரீலக்‌ஷ்மி மூவிஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. 

தமிழ் சினிமாவின் அடுத்த இளைய தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தபின் அவரது இடத்தை சிவகார்த்திகேயன் திரையிலும் மக்கள் மனதிலும் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றபடி தனது ஒவ்வொரு படத்திலும் வளர்ச்சியை நோக்கி நகர்ந்தபடி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

தமிழைத் தவிர்த்து தெலுங்கு மற்றும் வெளிநாடுகளில் முதற்கொண்டு அவருக்கு ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகையுடன் சிவகார்த்திகேயன் நடன்மாடிய வீடியோ ஒன்று தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அவருக்கு பரவலான ஆதரவை பெற்றுத் தந்துள்ளது.

ஸ்ரீலீலாவுடன் குத்தாட்டம்

சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற கல்லூரி நிகழ்வு ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். மகேஷ் பாபு நடித்து தெலுங்கில் வெளியான குண்டூர் காரம் படத்தில் ரசிகர்களைக் கவர்ந்த ஸ்ரீலீலாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் தெலுங்கில் பேசினார். அவர் தெலுங்கு மொழியில் சரியாகப் பேசியதாக நடிகை ஸ்ரீலீலா உறுதிப்படுத்தினார். மேலும் சிவகார்த்திகேயனின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது திரைப்பயணம் தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருப்பதாக ஸ்ரீலீலா தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீலீலா மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து குண்டூர் காரம் படத்தின் பாடலுக்கு நடனமாடினார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தி வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழியிலும் பிரபலமாகி வரும் ஸ்ரீலீலா, நடிகர் சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசியுள்ளதும் அவருடன் சேர்ந்து நடனமாடியுள்ளது தமிழ் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
பிரபல தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
Breaking News LIVE: தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Thiruppavai Paadal 1:
Thiruppavai Paadal 1: "கண்ணனை பார்த்து..பார்த்து, தாயின் கண்களே அழகாகிவிட்டது" போற்றி பாடும் ஆண்டாள்!
Bumrah: கதறிய கங்காரு பாய்ஸ்! பும்ரா எனும் புயல் படைத்த புது சாதனை - காலையிலே ஹாப்பி
Bumrah: கதறிய கங்காரு பாய்ஸ்! பும்ரா எனும் புயல் படைத்த புது சாதனை - காலையிலே ஹாப்பி
Embed widget