Sivakarthikeyan: "என்னுடைய நடிப்பில் பாதி ரஜினியின் சாயல் இருக்கும்”.. சிவகார்த்திகேயன் ஓபன் டாக்..!
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவி இயக்குநர் என்.எஸ். பொன்குமார் இயக்கியுள்ள படம் “1947 ஆகஸ்ட் 16”. இப்படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாகவும், ரேவதி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.
வெற்றி நம் கேரியரை தான் முடிவு செய்யும். ஆனால் கேரக்டர் தான் ஒருவரின் வாழ்க்கையை முடிவு செய்யும் என 1947 ஆகஸ்ட் 16 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவி இயக்குநர் என்.எஸ். பொன்குமார் இயக்கியுள்ள படம் “1947 ஆகஸ்ட் 16”. இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாகவும், அறிமுக நடிகை ரேவதி ஹீரோயினாகவும் நடித்துள்ள ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “1947 இது நம்முடைய சுதந்திரம் தொடர்பான கதை. விடுதலைக்கு பின் ஒரு நாட்டிற்கு எவ்வளவு பெரிய வலி நிறைந்த பின்னணி இருக்கும். அதில் ஒரு கதையை வைத்து பொன்குமார் இந்த படத்தை எடுத்துள்ளார். டைட்டில், போஸ்டர், ட்ரெய்லர் எல்லாவற்றிலும் அவரின் உழைப்பு தெரிகிறது. முதல் படத்திலேயே வரலாற்று காட்சிகளை எடுத்துள்ளது சவாலான காரியம் தான். மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள்.
கௌதம் கார்த்திக்கை லண்டனில் ஒரு நிகழ்ச்சி பண்ணும் போது சந்தித்தேன். அவரின் அப்பா கார்த்திக்கின் மிகப்பெரிய ரசிகர் நான். எந்த நடிகரின் சாயலும் இல்லாமல் நடிக்கக்கூடிய ஒரே நடிகர் கார்த்திக் தான். நான் பாதி ரஜினியின் நடிப்பை வச்சி தான் பெர்பாமன்ஸ் பண்றேன். கார்த்திக் எப்படி எல்லோரையும் டார்லிங் என அன்பாக அழைப்பாரோ அப்படி ஒரு டார்லிங் தான் கௌதம். வெற்றி நம் கேரியரை தான் முடிவு செய்யும். ஆனால் கேரக்டர் தான் ஒருவரின் வாழ்க்கையை முடிவு செய்யும்.
கல்யாணத்திற்கு பிறகு பலருக்கும் வாழ்க்கை மாறி இருக்கும். அதனை அதிர்ஷ்டம் கூட சொல்லலாம். அது ஒரு பொறுப்பு என்று கூட சொல்லலாம். நான் ஆர்த்தியை திருமணம் செய்த பிறகு தான் எனக்கு என தனி நிகழ்ச்சி கிடைத்தது. ஆனால் கல்யாணம் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.
மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். 7 ஆம் அறிவு படத்தின் ஆடியோ நிகழ்ச்சியை ஜெய் தொகுத்து வழங்கினார். அந்நிகழ்ச்சிக்கு நான் தான் வசனம் எழுதினேன். அதன் பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த எங்கேயும் எப்போதும் படத்தின் விழாவில் நான் தான் தொகுப்பாளர். இங்கு தான் அந்த விழா நடந்தது. அதற்கடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வெளியான மான் கராத்தே படத்தில் ஹீரோவாக நடித்தேன். விரைவில் வேறு ஒன்றும் நடக்க உள்ளது. ( முருகதாஸூடன் அடுத்த படம் பண்ண உள்ளதை மறைமுகமாக தெரிவித்தார்).
அடுத்து ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர் ராஜ்குமாருடன் தான் படம் பண்ண உள்ளேன்” என சிவகார்த்திகேயன் தெரிவித்தார். அப்போது ரசிகர் ஒருவர் மான் காரத்தே மாதிரி ஒரு படம் பண்ணுமாறு கேட்டார். உடனே, மான் கராத்தே முடிந்து எவ்வளவு தூரம் வந்து விட்டேன். இப்போது மாவீரன் படத்தில் நேரடியாக கராத்தே தான் என கலகலப்பாக சிவகார்த்திகேயன் பதிலளித்தார்.