மேலும் அறிய

Madharaasi Box Office: 25 கோடிப்பே... மதராஸி படம் இரண்டு நாளில் அள்ளியது இதுதான் - இன்று வசூல் அள்ளுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீசாகியுள்ள மதராஸி படம் இரண்டு நாளில் ரூபாய் 25 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உயர்ந்த்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் மதராஸி. பிரபல திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

மதராஸி கலெக்ஷன் எவ்வளவு?

பக்கா கமர்ஷியல் திரைப்படமாக இந்த படம் வெளியாகியுள்ளது. இந்த படம் முதல் நாள் ரூபாய் 13 கோடி வசூல் செய்த நிலையில், நேற்று படத்திற்கு வரவேற்பு எப்படி? என்பதை கீழே காணலாம். மதராஸி படம் நேற்று மட்டும் ரூபாய் 11.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

முதல் நாள் வசூலுடன் ஒப்பிடும்போது நேற்று படத்தின் வசூல் குறைவு ஆகும். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இந்திய அளவில் மதராஸி 25.40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.  நேற்று மதராஸி படத்திற்கு மாலைக் காட்சிக்கும், இரவுக்காட்சிக்கும் ரசிகர்கள் அதிகளவு குவிந்தனர். 

ஹவுஸ்ஃபுல்லா?

மாலை காட்சியில் 61.02 சதவீதமும், இரவுக்காட்சியில் 74.27 சதவீதமும் ரசிகர்கள் திரண்டனர். காலை காட்சியில் 34.49 சதவீதமும், மதிய காட்சியில் 59.84 சதவீதமும் திரண்டனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சென்னையில் நேற்று ரசிகர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. 

சென்னையில் மட்டும் 73.75 சதவீதம் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடியது.மதுரையில் 47 சதவீதமும், கோவையில் 59.75 சதவீதமும், பாண்டிச்சேரியில் 58.75 சதவீதமும், சேலத்தில் 52.75 சதவீதமும், வேலூரில் 50 சதவீதமும், திண்டுக்கல்லில் 57.50 சதவீதமும், கொச்சியில் 48.50 சதவீதமும் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடியது.

காட்சிகள் அதிகரிப்பு:

சென்னையிலும், கோவையிலும் நேற்று காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 593 காட்சிகளும், கோவையில் 211 காட்சிகளும் ஓடியது. சென்னையில் முதல் நாள் 587 காட்சிகளும், கோவையில் 206 காட்சிகளும் ஓடிய நிலையில் திரையரங்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தெலுங்கிலும் மதராஸி படம் ஓரளவு வரவேற்பை பெற்று வருகிறது. தெலுங்கில் ஹைதரபாத் நகரில் 249 காட்சிகள் நேற்று மட்டும் திரையிடப்பட்டது.

கம்பேக் தந்த ஏ.ஆர்.முருகதாஸ்:

மதராஸி படத்திற்கு சிலர் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்தாலும், ஆக்ஷன் காட்சிகள் உள்பட படம் கமர்ஷியல் படமாக இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று படத்திற்கு நல்ல கூட்டம் வரும் என்று படக்குழு நம்புகிறது. 
தொடர் தோல்வியில் துவண்டிருந்த ஏ.ஆர்.முருகதாஸிற்கு இந்த படம் மீண்டும் ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது. 

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால் வில்லனாக நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். ஸ்ரீலட்சுமி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

அமரன் படத்தின் முதல் நாள் வசூல் அளவிற்கு மதராஸி படம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அமரன் படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்பதாலும், அது கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பு என்பதாலும் மிகப்பெரிய அளவு ப்ரமோஷன் செய்யப்பட்டது. ஆனால், அமரன் படத்துடன் ஒப்பிடும்போது இந்த படத்திற்கு ப்ரமோஷன் குறைவு ஆகும். 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை பட்ஜெட்டை கடக்குமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும்.

 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget