ஸ்ருதி நாராயணன் வெளியிட்ட மசாஜ் வீடியோ.. ரொம்ப ஓவராத்தான் போறாங்களோ!
சிறகடிக்க ஆசை சீரியலில் பிரபலமடைந்த நடிகை ஸ்ருதி நாராயணனின் மசாஜ் வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா ரோலில் ரோஹினிக்கு தோழியாக நடித்து வருபவர் ஸ்ருதி நாராயணன். சமீபத்தில் இவரது அந்தரங்க வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சமூகவலைதளத்தில் மசாஜ் செய்யும் வீடியோ ஒன்றை ஸ்ருதி நாராயணன் வெளியிட்டிருக்கிறார்.
சினிமாவில் ஹீரோயின் ஆக வேண்டும் என்ற அவரது சிறு வயதில் இருந்தே இருக்கிறது. இதற்காகவே 12ஆம் வகுப்பு முடித்ததும் விஷூவல் கம்யூனிகேசன் படிப்பில் சேர்ந்தார் ஸ்ருதி நாராயணன். இதைத்தொடர்ந்து யூடியூப் சேனலில் வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் புரோக்ராம் புரொடியூசராகவும் பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. வேலை கிடைத்தாலும் அவருடைய கனவு நடிப்பின் மீதே இருந்திருக்கிறது. இந்நிலைில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம், மாரி போன்ற சீரியல்களிலும் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சின்ன சின்ன ரோல்களில் நடித்திருந்தாலும், ஸ்ருதி நாராயணனுக்கு பெயரும் புகழையும் கொடுத்தது சிறகடிக்க ஆசை சீரியல் தான். இந்த சீரியலில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டை பெற்றுள்ளது. இந்நிலையில், ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை பார்த்து பலரும் அவரை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். அதைத்தொடர்ந்து அது படத்திற்கான ஆடிஷன் என்றும் கூறப்பட்டது. பின்னர், ஸ்ருதி நாராயணன் அசிங்கமான ஆண்கள் இருக்கும் உலகில் பெண்ணாக பிறந்து விட்டேன். இதற்காக அஞ்சி வீட்டில் இருக்க மாட்டேன் என பதிலடி கொடுத்தார்.
இந்த பிரச்னை ஓய்ந்தாலும் ஸ்ருதி நாராயணன் குறித்த பேச்சுகள் ஓய்ந்த பாடில்லை. அண்மையில் இவரது நடிப்பில் வெளியான கட்ஸ் திரைப்படம் தோல்வியை தழுவினாலும் தொடர்ந்து படங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக வலம் வரும் ஸ்ருதி நாராயணன், புதிதாக தொடங்கிய ஸ்பா சென்டருக்கு சென்றுள்ளார். அதில், நாள்தோறும் பரபரப்பாக வேலை செய்கிறோம். நமக்கும் ஓய்வு தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் மசாஜ் செய்வது நல்ல பீலிங்காக இருக்கும் என தலை முதல் கால் வரை மசாஜ் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram





















