சின்னத்திரையில் நடிகைகளுக்கு அட்ஜெஸ்ட்மன்ட் இருக்கா?.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ஓபன் டாக்
சீரியல் நடிகைகளுக்கு நடக்கும் அட்ஜெஸ்ட்மன்ட் குறித்து சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தெரிவித்திருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில், முத்து, மீனா, மனோஜ், ரோகிணி ஆகிய கதாபாத்திரங்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ளது. அதேபோன்று இந்த சீரியில் மீனாவுக்கு தங்கையாக நடிப்பவர் சங்கீதா லியோனிஸ். மருத்துவ படிப்பை முடித்திருக்கும் இவர் இந்த சீரியல் மூலம் மக்களின் பேரன்பை பெற்றுள்ளார். குறிப்பாக குடும்ப பெண்கள் பலருக்கும் பிடித்த சீரியலாக சிறகடிக்க ஆசை இருக்கிறது.
சிறகடிக்கை ஆசை சீரியலில் தங்கையாக வரும் இவர் தற்போது முத்துவுக்கு பிடிக்காத நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். சீரியலில் விறுவிறுப்பான சம்பவங்களும் அரங்கேறி வரும் சூழலில் இதுவும் ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சீரியல் மூலம் மீனாவின் தங்கையாக வந்து தனக்கென்ற ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் சங்கீதா லியோனிஸ்.
இந்நிலையில், சங்கீதா லியோனிஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில் சீரியல்களில் நடிகைகளுக்கு இருக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இப்போது குடும்பத்தில் இருக்கும் பலரும் மீடியா என்றாலே பயப்படுகிறார்கள். சினிமாவாக இருந்தாலும் சரி, சின்னத்திரையாக இருந்தாலும் சரி திறைமை இருந்தால் நாம் எதையும் சமாளிக்கலாம். குறிப்பாக பெண்கள் கிட்ட கேட்குற ஒரே கேள்வி அட்ஜெஸ்ட்மன்ட். இது பற்றி பல நடிகைகள் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்ர்கள். நான் சின்னத்திரை மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறேன். ஆனால், இதுவரை எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை, எந்த காலும் வந்ததே இல்லை என தெரிவித்துள்ளார்.




















