Watch video: சிம்புவின் மாநாடு சிங்கிள் ஷாட் பாட்டில் ஃபைட் - படக்குழு வெளியிட்ட வீடியோ..!
படத்தில் வரும் சண்டைக்காட்சிகளும் அருமையாக இருக்கிறது என்றும் கூறுகின்றனர். இதில் வரும் சண்டைக்காட்சிகளில் பாட்டில் ஃபைட் சீன் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் மாநாடு ஏகப்பட்ட தடங்கல்களுக்கு பிறகு கடந்த 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மாநாடு படத்துக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பை கொடுத்துள்ளனர். படத்தின் திரைக்கதையும், காட்சியமைக்கப்பட்ட விதமும் அருமையாக இருக்கிறதென ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு மிரட்டலாக இருக்கிறதெனவும், சிம்புவுக்கு இந்தப் படம் பக்கா கம்பேக் எனவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
படத்தில் வரும் சண்டைக்காட்சிகளும் அருமையாக இருக்கிறது என்றும் கூறுகின்றனர். இதில் வரும் சண்டைக்காட்சிகளில் பாட்டில் ஃபைட் சீன் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. தற்போது, பாட்டில் ஃபைட் சீன் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தியேட்டர்களில் மட்டும் பார்த்து ரசித்த இந்த சண்டைக்காட்சிகளை, யூடியூபில் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை தற்போது சிம்பு ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
மாநாடு படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ஏழு கோடி ரூபாயும், மற்ற இடங்களில் மூன்று கோடி ரூபாய் என மொத்தம் 10 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது. தற்போது படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதுவரை சிம்பு நடித்த படங்களில் வல்லவன் படமும் (30 கோடி ரூபாய்), ஒஸ்தி படமும்தான் (36 கோடி ரூபாய்) வசூலில் 30 கோடி ரூபாயை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாடு படத்தின் இந்த மாபெரும் வெற்றியை படக்குழு கொண்டாடிவருகிறது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவுடன் கேக் வெட்டி இந்த வெற்றியை கொண்டாடினர். மேலும் இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து கால்ஷீட் கேட்டு சிம்பு வீட்டுக்குள் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் படையெடுக்க தொடங்கிவிட்டனர் எனவும் கோலிவுட்டில் பேசப்படுகிறது.
மேலும் படிக்க: SJ Suryah Maanadu | மாநாடு எஸ்.ஜே.சூர்யா ரோலுக்கு முதலில் கமிட்டானவர் வேறு ஹீரோ! இதுதான் சிக்கலாம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்