''நான் தூங்கிட்டேன் ..வேற வாய்ஸ்ல ரஹ்மான் பாட சொன்னாரு'' - முக்காலா பாடல் குறித்து மனோ !
எம்.எஸ்.வி உள்ளிட்ட சில பாடகர்களின் குரலில் பாடிக்காட்டியிருக்கிறார். ஆனால் அது என்னவோ ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிடிக்கவில்லை .
முக்காலா முக்காபுல்லா :
1994 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காதலன். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான முக்காலா முக்காபுல்லாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. . இந்த பாடலை வாலி எழுத்தில் ஸ்வர்ணலதா , மனோ , ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட மூவரும் இணைந்து பாடியிருந்தார்கள் .
View this post on Instagram
சுவாரஸ்ய பின்னணி :
ஏ.ஆர்.ரஹ்மான் இந்த பாடலை பாடுவதற்கு மனோவை அழைத்தது இரவு நேரத்தில். அந்த நேரம் மனோ படு பிஸியாக இயக்கிக்கொண்டிருந்த நேரம் , அசதியில் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவிற்கு வந்தவர் இரவு 11, 12 மணிக்கெல்லாம் தூங்கிவிட்டார். அதன் பிறகு இரண்டு மணியளவில் ஏ.ஆர் ரஹ்மானின் உதவியாளர் மனோவை ரெக்கார்டிங்கிற்கு அழைக்க, தூக்க கலக்கத்தில் ஸ்டூடியோ உள்ளே சென்றால் , அங்கு காலை 6 மணி போல உற்சாகமாக இயங்கிக்கொண்டிருந்தாராம் ஏ.ஆர்.ஆர். உடனே பாடலின் சங்கதிகளை நோட்ஸ் எடுத்துக்கொண்டு மனோ பாட ஆரமித்திருக்கிறார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் கொஞ்சம் வித்தியாசமான குரலில் பாடுங்களேன் என கேட்க , எம்.எஸ்.வி உள்ளிட்ட சில பாடகர்களின் குரலில் பாடிக்காட்டியிருக்கிறார். ஆனால் அது என்னவோ ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிடிக்கவில்லை .
பிரபல பாடகரை இமிடேட் செய்த மனோ!
தூக்க கலக்கத்தில் இருந்த மனோ வெளியே சென்று ஒரு டீ குடித்துவிட்டு வருகிறேன் என கூறிவிட்டு சென்றிருக்கிறார். அங்கே வித்தியாசமான குரலில் பாட வேண்டுமா என யோசித்துக்கொண்டே டீ குடித்தவருக்கு ஷோலே படத்தில் இடம்பெற்ற மெஹ்பூபா பாடகர் ஆர்.டி.பர்மன் நினைவுக்கு வந்திருக்கிறார். உடனே ஏ.ஆர்.ரஹ்மானிடம் “முக்காலா முக்காபுல்லா “ என அந்த டோனில் பாட அவரும் அதற்கு பச்சை கொடு அசைத்துவிட்டாராம் . இப்படித்தான் அந்த பாடல் உருவாகியிருக்கிறது. நேர்காணலில் இதனை பகிர்ந்துக்கொண்ட மனோ . அந்த பாடல் எனக்கும் சரி , பிரபு தேவாவிற்கும் சரி மிகப்பெரிய அந்தஸ்தை ஏற்படுத்திக்கொடுத்தது என தெரிவித்துள்ளார்.