![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Singer Chinmayi: அட இப்படியும் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லலாமா? வித்தியாசமான முறையில் பதிவிட்ட பாடகி சின்மயி..
பாடகி சின்மயி வித்தியாசமாக ஜெர்மன் பாடலை பாடி தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
![Singer Chinmayi: அட இப்படியும் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லலாமா? வித்தியாசமான முறையில் பதிவிட்ட பாடகி சின்மயி.. Singer Chinmayi has expressed her Christmas wishes by singing a different German song in x platform Singer Chinmayi: அட இப்படியும் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லலாமா? வித்தியாசமான முறையில் பதிவிட்ட பாடகி சின்மயி..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/25/def0d3843bacd10da6cc9f25dbb92ad41703477150455589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துவர்களு மிக முக்கியமான நாள். இயேசு கிறிஸ்து பிறந்த நாள் இன்று. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி நேற்று நள்ளிரவு முதல் தேவாலயத்தில் திருபலிக்காக மக்கள் சென்று வருகின்றனர். மேலும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையொட்டி அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதோடு, இயேசு பிறந்ததை சித்தரிக்கும் வகையில் குடிலும் அமைக்கப்பட்டு உள்ளது. சென்னை சாந்தோம், சென்னை கிண்டி அருகே பரங்கிமலையில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க புனித தோமையார் தேவாலயம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டன.
Merry Christmas!! pic.twitter.com/u5BtJBJ5Lb
— Chinmayi Sripaada (@Chinmayi) December 24, 2023
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாடகி சின்மயி தனது சமூக வளைத்தளத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வழக்கம்போல் இல்லாமல் வித்தியாசமான முறையில் தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். இது தொடர்பான பதிவில், ஜெர்மன் பாடலில் பாடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சின்மயி தமிழில் மட்டுமல்ல பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். தனது தனித்துவமான குரலில் ரசிகர்களை மயக்கும் தன்மை கொண்டவர். குரு திரைப்படத்தில் வரும் மய்யா மய்யா பாடல் உலகம் முழுவதும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் ஆன பாடல். பாடகி சின்மயி சமூக வளைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.
சமூக பிரச்சனைக்காக குரல் கொடுப்பவர். குறிப்பாக பிற்போக்கு தனமான விஷயங்களை எதிர்த்து பேசக்கூடியவர். ’me too’ விவகாரத்தில் மிகவும் பரீட்சியமானவர். கவிஞர் வைரமுத்து மீது குற்றம்சாட்டியதால் கடுமையான எதிர்ப்புகளை பெற்றார். ஆனாலும் me too விவகாரத்தில் தான் எடுத்த நிலைப்பாட்டில் இருந்து சற்றும் மாறாது தொடர்ந்து அந்த பிரச்சனை குறித்து பேசியவர்.
இந்த பிரச்சனை காரணமாக பாடகி சின்மயி தமிழ் திரையுலகில் இருந்து சற்று ஒதுக்கி வைக்கப்பட்டார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்த 96 படத்தில் அனைத்து படல்களை பாடி ரசிகர்கள் மனதில் மீண்டும் நீங்கா இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு வெளியான லியோ படத்தில் நடிகை த்ரிஷாவுக்கு டப்பிங் கொடுத்திருந்தார். 96, லியோ போன்ற படங்கள் மூலம் தமிழில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்து வருகிறார் சின்மயி. தமிழ் திரையுலகில் இருந்து சற்று விலகி இருந்தாலும் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பாடி வருகிறார். பாடகி சின்மயி மாயக் குரல் கொண்டவர். தனது காந்தக் குரல் மூலம் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சின்மயி.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)