Shriya Saran watch video: நிறைமாத கர்ப்பிணியாக நடனம்.. ஸ்ரேயாவின் இந்த ஸ்டெப்ஸை பார்த்தா இந்த நாள் இனிய நாள்..
ஸ்ரேயா கர்ப்பகாலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொழிலபதிபரை மணந்து பார்சிலோனாவில் செட்டில் ஆன நடிகை ஸ்ரேயா, கடந்த அக்டோபர் மாதம் இந்திய சினிமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் தனக்கு கடந்த வருடமே குழந்தை பிறந்துவிட்டதாகவும், குழந்தை பிறந்து 9 மாதமாகிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்
இந்த தகவல் ரசிகர்கள், சினிமாத்துறையினர் இடையே இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது. இவ்வளவு பெரிய ரகசியத்தை இப்படி மறைத்துவிட்டாரே என அனைவருமே ஸ்ரேயா மீது செல்லமாக கோபப்பட்டனர். குழந்தை பிறப்பு குறித்து தெரிவித்திருந்த ஸ்ரேயா, முன்னதாக தன் குழந்தை குறித்து பேசிய அவர், "என்னுடைய மகளின் பெயர் ராதா. நான் இனிமேலும் அவள் குறித்து ரகசியம் காக்க எதுவுமே இல்லை. அவள் ஏற்கெனவே பல நாடுகள் சுற்றிவிட்டாள். அவள் ஒரு ட்ராவல் பேபி தான். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு குழந்தை தாயைப் பெற்றெடுத்தது போல.
ராதா என் சிறந்த தோழி எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த லாக்டவுனில் பார்சிலோனாவில் ராதா பிறந்துள்ளார். திட்டமிட்டு பிறந்த குழந்தைதான் ராதா. இதுதான் ஒரு குடும்பத்தை தொடங்குவதற்கான நேரமென திட்டமிட்டு முடிவெடுத்தோம். இது அழகான சுகப்பிரவசமாகவே இருந்தது" என்றார்.
View this post on Instagram
இந்நிலையில் ஸ்ரேயா கர்ப்பகாலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஸ்ரேயா கண்ணாடி முன்னால் நின்று தனக்கே உரித்தான நடனத்தை அழகாக ஆடுகிறார். க்யூட் ஸ்டெப் வைத்து கர்ப்பிணியாக ஸ்ரேயா ஆடும் அந்த நடனம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் அந்த வீடியோவை ஷேர் செய்து ஸ்ரேயாவை பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram
கடந்த ஜனவரி மாதம்தான் ஸ்ரேயாவின் செல்லமகள் ராதா ஒரு வயதை எட்டினார். அதனையும் சிறப்பாக கொண்டாடினர் ஸ்ரேயா.