வேள்பாரி படத்திற்கு ஷங்கர் டார்கெட் செய்த மூன்று நடிகர்கள் யார் தெரியுமா ?
இந்தியன் 3 படத்திற்கு பின் ஷங்கர் இயக்கும் வேள்பாரி படத்தில் கே.ஜி.எஃப் பட நடிகர் யாஷ் மற்றும் மேலும் சில தமிழ் நடிகர்கள் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
ஷங்கர்
ஜெண்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் ஷங்கர். காதலன், ஜீன்ஸ் , பாய்ஸ், அந்நியன் , இந்தியன் , முதல்வன் என அடுத்தடுத்த படங்களில் பிரம்மாண்டங்களுக்கு பெயர் போனவராகினார் ஷங்கர். ரஜினியுடன் இவர் இயக்கிய எந்திரன் திரைப்படம் தமிழ் மட்டுமில்லாமல் இந்திய திரைப்படங்களில் பெரும் சாதனையாக கருதப்பட்டது. பிரம்மாண்டத்திற்கு அடையாளமான ஷங்கர் இயக்கத்தில் வெளியான கடந்த இரண்டு படங்களும் தோல்வியை தழுவியுள்ளது ஒட்டுமொத்த ஷங்கர் ரசிகர்களுக்கும் வருத்தத்தை கொடுத்துள்ளது. அடுத்தபடியாக ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் வேள்பாரி படத்தை அனைவரும் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
வேள்பாரி
எழுத்தாளர் சு வெங்கடேசன் எழுதிய நாவல் வேள்பாரியை தழுவி ஷங்கர் பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு வருகிறார். இதற்கான திரைக்கதை எழுதும் பனிகளை கொரோனா லாக்டவுன் காலத்தில் அவர் தொடங்கினார். தற்போது படத்தில் நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தெலுங்கில் பாகுபலி , தமிழில் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று திரைப்படங்களைப் விட இப்படம் பல மடங்கு பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
வேள்பாரி படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள்
தற்போது வரை வேள்பாரி கதையை ஷங்கர் கே.ஜி.எஃப் நடிகர் யாஷ் , நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) மற்றும் நடிகர் அர்ஜூன் ஆகிய மூன்று பேரிடம் சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நடிகர் யாஷ் இந்தியில் உருவாகும் ராமாயணம் படத்தில் ராவணனாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் அவர் வரலாற்று படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மணாக ஜெயம் ரவி நடித்துள்ளார்.
கேம் சேஞ்சர்
ஷங்கர் இயக்கியுள்ள கேம் சேஞ்சர் படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண் நடித்துள்ளார். பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார். சமுத்திரகனி , எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். தமன் இசையமைத்துள்ளார். கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வெளியான இப்படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.