Shakuntalam : சாகுந்தலம் படத்திற்கு கான் உலக திரைப்பட விழாவில் அங்கீகாரம்... ஆறுதல் அடைந்த படக்குழு..
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்த 'சாகுந்தலம்' திரைப்படம் கான் உலக திரைப்பட விழாவில் விருதை வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
![Shakuntalam : சாகுந்தலம் படத்திற்கு கான் உலக திரைப்பட விழாவில் அங்கீகாரம்... ஆறுதல் அடைந்த படக்குழு.. Shakuntalam movie wins Best Costume Designer award at Cannes world film festival Shakuntalam : சாகுந்தலம் படத்திற்கு கான் உலக திரைப்பட விழாவில் அங்கீகாரம்... ஆறுதல் அடைந்த படக்குழு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/30/dcdc3a28eed6f7a5059546e271a18b331685470111168224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குணசேகரன் இயக்கத்தில் புராணக் கதையை மையமாக வைத்து வெளியான திரைப்படம் 'சாகுந்தலம்'. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலகெங்கிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 3டி தொழில்நுட்பத்துடன் வெளியான இப்படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் நடிகை சமந்தாவும், துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகனும் நடித்த இப்படத்தில் அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், மதுபாலா, மோகன் பாபு, கபீர் சிங் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சுமார் 65 கோடி பட்ஜெட்டில் வெளியான இப்படம் படு மோசமான விமர்சனங்களை பெற்றது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான படம் எதிர்பாராத தோல்வியை சந்தித்தது. மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோய் பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு நடிகை சமந்தாவின் நடிப்பில் வெளியான படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.
புலம்பிய தில் ராஜு:
சாகுந்தலம் படம் படு தோல்வியை சந்தித்ததால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார் தயாரிப்பாளர் தில் ராஜு. ஓடிடி தளத்திற்கு 35 கோடி வரை விற்பனை நடைபெற்றதால் இழப்பை சற்று குறைக்க முடிந்தது. எனது 25 வருட சினிமா பயணத்தில் இது போன்ற ஒரு தோல்வியை சந்தித்தது இல்லை என புலம்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் ஒரு சில காட்சிகளுக்காக 3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது தான் பட்ஜெட்டை எகிற வைத்தது என குமுறி இருந்தார் தில் ராஜு.
கான் உலக விழாவில் விருது பெற்ற சாகுந்தலம்:
வசூல் ரீதியாக தோல்வியை தழுவினாலும் தொழில்நுட்ப ரீதியாக பாராட்டுக்களை குவித்தது. அந்த வகையில் சாகுந்தலம் படம் கேன்ஸ் உலக திரைப்பட விழாவில் அங்கீகரிக்கப்பட்டது. சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் கான் உலகத் திரைப்பட விழாவில் சிறந்த இந்தியப் படமாக கான் உலகத் திரைப்பட விழா, ஃபெஸ்டிவல் டி கான் போன்றது அல்ல. இருப்பினும், சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற தகவலை தயாரிப்பாளர்கள் குழு இணையத்தின் மூலம் தெரிவித்துள்ளனர். ஃபெஸ்டிவல் டி கேன்ஸ் மற்றும் கேன்ஸ் உலக திரைப்பட விழா இரண்டுமே வெவ்வேறு நிகழ்வுகள். சாகுந்தலம் கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவிற்கு சமர்ப்பிக்கப்பட்டாலும், அது ஃபெஸ்டிவல் டி கான் படத்திற்கு பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய நீட்டா லுல்லாவுக்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருது வழக்கப்பட்டுள்ளது. சாகுந்தலம் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கவலையை கொடுத்தலும் இந்த விருது ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.
35 ஆண்டுகளாக பயணம் :
நீட்டா லுல்லா கடந்த 1985ம் ஆண்டு முதல் ஆடை வடிவமைப்பாளராக 35 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 300க்கும் மேற்பட்ட படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். மூன்று முறை தேசிய விருது பெற்றுள்ள நீட்டா லுல்லா சாகுந்தலம் படத்தில் புராண காலகட்டத்திற்கு ஏற்ப ஆடை அலங்காரத்தை சிறப்பாக செய்தது இந்த அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)