ஆஸ்கார் விருதை தொட்டு பார்க்க அனுமதியுங்கள்... ராம் சரணிடம் கோரிக்கை வைத்த ஷாருக்
இன்று வெளியான பதான் படத்தின் ட்ரைலரை தெலுங்கில் வெளியிட்ட ராம் சரணுக்கு நன்றி தெரிவித்து லவ்லி போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார் நடிகர் ஷாருக்கான்

'பதான்' இந்த பேர கேட்டாலே சும்மா அதிருதுல... பெரும் பரபரப்பையும் சர்ச்சையை ஏற்படுத்திய பதான் படத்தின் டிரைலர் இன்று வெளியானது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் - தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் எழுதி இயக்கியுள்ள இப்படம் ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக தயாராகவுள்ளது.
ட்ரைலரை வெளியிட்ட விஜய் - ராம் சரண் :
ஷாருக்கான் ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு 'பதான்' திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஹிந்தியில் உருவான இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகும் பதான் படத்தின் ட்ரைலரை நடிகர் ராம் சரண் மற்றும் நடிகர் விஜய் தங்களது ட்விட்டர் பக்கம் மூலம் இன்று வெளியிட்டனர். மேலும் படக்குழுவினர்களுக்கு அவர்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
Thank u so much my Mega Power Star @alwaysramcharan. When ur RRR team brings Oscar to India, please let me touch it!!
— Shah Rukh Khan (@iamsrk) January 10, 2023
(Mee RRR team Oscar ni intiki tecchinappudu okkasaari nannu daanini touch cheyyanivvandi! )
Love you.
ஆஸ்காருடன் திரும்ப வாழ்த்துக்கள் :
இந்த இரண்டு சூப்பர் ஹீரோஸ் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள பதான் படத்தின் ட்ரைலரை வெளியிட்டதற்காக அவர்களுக்கு நன்றிகளை ட்விட்டர் மூலம் தனித்தனியே தெரிவித்துள்ளார் பாலிவுட் கிங் கான். நடிகர் ராம் சரணுக்கு 'உங்கள் ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் ஆஸ்காருடன் திரும்பும் போது நான் அதை தொட்டு பார்க்க என்னை அனுமதியுங்கள். லவ் யூ என லவ்லியாக போஸ்ட் செய்திருந்தார் நடிகர் ஷாருக்கான்.
Pathaan time Aasannamaindi. Action ki siddham avvandi 😎👊🏻 Watch #PathaanTrailer in Telugu NOW!
— Shah Rukh Khan (@iamsrk) January 10, 2023
Celebrate #Pathaan with #YRF50 only at a big screen near you on 25th January. Releasing in Hindi, Tamil and Telugu.@deepikapadukone | @thejohnabraham | #SiddharthAnand | @yrf pic.twitter.com/DG5rx9xEm2
14 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்ட ஆர்.ஆர்.ஆர் :
எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் நடிகர் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் சர்வதேச அளவில் பாராட்டை குவித்து வசூல் ரீதியாகவும் சாதனையும் படைத்தது. 2023ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 14 பிரிவுகளின் கீழ் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்கார் விருது குறித்த அறிவிப்பு ஜனவரி 24ம் தேதி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம், டிம்பிள் கபாடியா மற்றும் அசுதோஷ் ராணா நடித்துள்ள 'பதான்' திரைப்படம் தான் 2023ல் வெளியாகும் முதல் மிக பெரிய பாலிவுட் திரைப்படமாகும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

