மேலும் அறிய

Richa Pallod : விஜய் பட நடிகை இப்போ என்ன செய்றாங்க? ஷாஜஹான் ஹீரோயின் மறுபடி எண்ட்ரியா?

Richa Pallod : நடிகர் விஜய் ஜோடியாக ஷாஜகான் படத்தின் நடித்த ரிச்சா பலோட் தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்துள்ளார். 

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் மிகவும் பிரபலமான ஒரு முகமாக மாறும் நடிகர் நடிகைகள் ஏராளம். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் ரிச்சா பலோட். 16 வயது முதல் மாடலிங் துறையில் ஈடுபட்டு ஏராளமான விளம்பரங்களில் நடித்து வந்தார். அதன் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1991ம் ஆண்டு வெளியான 'லாமே' படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பின்னர் தமிழ் சினிமாவில் நேரடியாக ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார் ரிச்சா பலோட். 

 

Richa Pallod : விஜய் பட நடிகை இப்போ என்ன செய்றாங்க? ஷாஜஹான் ஹீரோயின் மறுபடி எண்ட்ரியா?


2001ம் ஆண்டு ரவி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான 'ஷாஜகான்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். நிழல்கள் ரவி, விவேக், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் அப்படத்தில் நடித்திருந்தனர். முதல் படத்திலேயே விஜய் ஜோடியாக நடித்து தூள் கிளப்பினார். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் நடிகையாக வலம் வந்த ரிச்சா பலோட் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? 

ஷாஜகான் படத்தை தொடர்ந்து அல்லி அர்ஜுனா, சம்திங் சம்திங், காதல் கிறுக்கன், யாகாவாராயினும் நா காக்க உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்த ரிச்சா பலோட்டுக்கு வாய்ப்புகள் குறையவே சீரியல் பக்கம் இறங்கினார். இரண்டு இந்தி சீரியலில் நடித்த பிறகு 2011ம் ஆண்டு ஹிமன்ஷூ பஜாஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகி கொண்ட நடிகை ரிச்சா பலோட் அவ்வப்போது விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்தார். இந்த தம்பதியினருக்கு மகன் ஒருவர் இருக்கிறார். 

ஷாஜகான் படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று வரையில் முணுமுணுக்கப்படுகின்றன. மணி ஷர்மாவின் இசையில் ஆல் டைம் ஃபேவரட் பாடல்களாக இன்றைய தலைமுறையினர் ரசித்து வருகிறார்கள். அதன் மூலம் ரிச்சாவின் முகமும் ரசிகர்கள் மத்தியில் பிரெஷாக இருக்கிறது.  முதல் படத்திலேயே ரிச்சா பலோட்டுக்கு பாராட்டுகளை பெற்று கொடுத்தது.  

 

Richa Pallod : விஜய் பட நடிகை இப்போ என்ன செய்றாங்க? ஷாஜஹான் ஹீரோயின் மறுபடி எண்ட்ரியா?

 

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் ரிச்சா பலோட் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பார். ஷாஜகான் படத்தில் பார்த்தது போலவே இருக்கீங்களே... மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வரவேண்டும் என கமெண்ட் மூலம் ரசிகர்கள் ரிச்சா பலோட்டுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.  

தற்போது கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் ரிச்சாவுக்கு இவ்வளவு  பெரிய மகன் இருக்கிறாரா? என ஆச்சரியப்படுகிறார்கள். மேலும் ரசிகர்கள் தங்களின் ஆதரவை லைக்ஸ் மூலம் குவித்து வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget