Jawaan : இல்தக்கா சையா இருக்கா.. நயன்தாராவைப் பற்றி கேட்ட ரசிகர்.. பொங்கிய ஷாரூக்
நயன்தாராவை பற்றி ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஷாருக் கான் கொடுத்த பதில் உங்களை ஆச்சரியப்படுத்தலாம்
அட்லீ இயக்கியிருக்கும் ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாக இருப்பதை தொடர்ந்து படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் படத்தின் கதாநாயகியாக நடித்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மீது காதல் வயப்பட்டாரா என்று ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, நகைச்சுவையான பதில் ஒன்றை கூறியுள்ளார் ஷாருக்கான்.
ஜவான்
ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் அட்லீ. முதல் படத்தின் வெற்றி அட்லீயை தனது இரண்டாவது படத்திலேயே விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. தெறி, மெர்சல், பிகில் என ஒன்றல்ல மூன்று படங்களை தொடர்ச்சியாக விஜயை வைத்து இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார் அட்லீ. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இடம்பிடித்து திடீரென்று தனது கவனத்தை பாலிவுட் பக்கம் திருப்பினார் அட்லீ.
ஷாருக்கானை இயக்கும் தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்ற அட்லீ முடிவு செய்ததின் விளைவுதான் ஜவான் திரைப்படம். அண்மையில் வெளியான ஜவான் படத்தின் ட்ரெய்லர் அட்லீ பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வரப்போகிறார் என்பதை அனைவருக்கும் உறுதிப்படுத்தியது.
ஷாருக்கானை கேளுங்கள்..
வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாக இருக்கும் ஜவான் திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதுவரை ரசிகர்களில் உற்சாகத்தை குறையாமல் வைத்திருக்க தொடர்ச்சியான அப்டேட்களை கொடுத்து வருகிறது படக்குழு.
நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ASK SRK என்கிற ஹாஷ்டாகில் ரசிகர்கள் கேட்டு வரும் கேள்விகளுக்கு உற்சாகமாக பதில் அளித்து வருகிறார். இதில் அவரிடம் படம் குறித்தான பல்வேறு கேள்விகளை கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள். அதுமட்டுமில்லாமல் ஒரு சில விளையாட்டுத்தனமான கேள்விகளுக்கு பதில் சொல்லி வருகிறார்.
நயன்தாரா மீது காதல் வந்ததா?
Chup karo! Doh bacchon ki maa hain woh!! Ha ha. #Jawan https://t.co/A9dujnaFCW
— Shah Rukh Khan (@iamsrk) August 10, 2023
அப்போது ரசிகர் ஒருவர் லேடி சூப்பஸ்டார் நயன்தாராவுடன் நடிக்கும்போது அவர் மீது காதல் கொண்டீர்களா? என்று கேள்வி கேட்டுள்ளார். இதற்கு தனது ஸ்டைலில் பதில் ஒன்றை கொடுத்துள்ளார் எஸ்.ஆர்.கே. “மூடு உன் வாயை.. இரண்டு குழந்தைகளுக்கு தாய் அவர்“ என்று பதில் ஒன்றை சொல்லியிருக்கிறார் ஷாருக் கான்.
ஷாருக்கான். நயன்தாரா, விஜய் சேதுபதி , யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது ஜவான் திரைப்படம்.