Jawan : புள்ளமேல கை வெக்குறதுக்கு முன்னாடி அப்பன தொடு பாக்கலாம்...ஜவான் ட்ரெய்லரின் ஷாருக்கான் வசனம் வைரல்
ஜவான் படத்தின் ட்ரெய்லரின் தந்தை மகன் குறித்து ஷாருக்கான் பேசிய வசனம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது
அட்லீ இயக்கியிருக்கும் ஜவான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ஒருபக்கம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிற நிலையில் ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும் ஒரு வசனம் ஷாருக் கானின் தனிப்பட்ட வாழ்க்கையை தொடர்புபடுத்தி இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
ஜவான் ட்ரெய்லர்
அட்லீ இயக்கி ஷாருக் கான் கதாநாயகனாகவும் நயன்தாரா ஹீரோயினாகவும், வில்லனாக விஜய் சேதிபதியும் நடித்துள்ளனர். மேலும் தீபிகா படுகோனே, பிரியாமணி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்களும் ஜவான் படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் மூலம் அனிருத் இசையமைப்பாளராக இந்தியில் அறிமுகமாகியுள்ளார். ஜவான் படம் செப்டம்பர் 7ம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நிறைவடைந்து படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த நேற்று ஜவான் படத்தின் இசைவெளியீடு நிகழ்ந்து முடிந்த நிலையில் இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. சமீப காலத்தில் இப்படியான ஒரு ட்ரெய்லரை பார்க்கவில்லை என்று ரசிகர்கள் பிரம்மாண்டமான இந்த ட்ரெய்லரை பார்த்து மிரண்டுள்ளார்கள். அதே நேரத்தில் ட்ரெய்லரின் இடம்பெற்ற வசனம் ஒன்றும் ஷாருக்கானின் தனிப்பட்ட வாழ்க்கை சம்பவம் ஒன்றை குறிப்பிடுவதாக இருப்பது இந்த ட்ரெய்லரின் மீதான கவனத்தை ஈர்த்துள்ளது.
சர்ச்சையில் சிக்கிய ஷாருக்கானின் மகன்
தந்தை மகன் என இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ஷாருக் கான். இந்த ட்ரெய்லரில் ஷாருக் கான் பேசும் “ புள்ள மேல கை வெக்குறதுக்கு முன்னாடி அவன் அப்பன தொடுறா பாக்கலாம்“ என்கிற வசனத்தை ஷாருக்கான் தனது மகனான ஆரியன் கானை தொடர்புபடுத்தி பேசியுள்ளதாக குறப்படுகிறது. கடந்த 2021 ஆம் போதை பொருள் கைவசம் வைத்திருந்ததாக ஆரியன் கான் காவல்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்து போதைப் பொருள் தடுப்பு அதிகாரியான் சமீர் வான்கடே ஷாருக்கானிடம் அவரது மகனை விடுவிக்க ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. மறுபக்கம் ஷாருக்கானின் மகன் மீதான பொய் குற்றச்சாட்டுகள்தான் என்றும் கூறப்பட்டது. தற்போது ஜவான் படத்தின் வசனம் இந்த நிகழ்வை சுட்டிக் காட்டுவதாகவே அமைந்துள்ளதாக இணையதளத்தில் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
Message from SRK to Sameer Wankhede and BJP IT Cell. 🔥🔥
— 𝗘𝗿 𝗔𝗮𝗸 𝗧𝗵𝘂 (@ErAakThu) August 31, 2023
This dialogue is personal. If You know, You Know…😂😂#JawanTrailer #Jawan #ShahRukhKhan𓀠 #Nayanthara pic.twitter.com/PtaSM9V9pT