Watch Video: மும்பை தெருக்களில் பறந்த வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ்.. 10 கோடிக்கு புதிய காரை வாங்கிய ஷாருக்கான்!
SRK Rolls Royce Car: கடந்த ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மும்பை தெருக்களில் 0555 என்ற நம்பர் பிளேட் கொண்ட கார் ஒன்றில் நடிகர் ஹாருக் கான் செல்வதை அவரது ரசிகர்கள் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ஜீரோ படத்திற்கு பிறகு ஷாருக் கான் நடிப்பில் இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ’பதான்’. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் வசூல் செய்து இந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் உள்பட பலர் நடிக்க, நடிகர் சல்மான் கான் ஒரு கேமியோ ரோலும் செய்திருந்தார். சித்தார்த் ஆனந்த் எழுதி இயக்க, யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. மேலும், இந்த படத்தின் இசையை விஷால்-சேகர் இசையமைக்க, சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாரா ஆகியோர் பின்னணி இசையமைத்திருந்தனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான பதான் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த ஜனவரி 25, 2023 அன்று வெளியானது. இந்த படத்தில் நடிகர் ஷாருக்கான் RAW பீல்ட் ஏஜெண்டாக பட்டையை கிளப்பி இருப்பார்.
இந்தநிலையில், பதான் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ஷாருக் கான் ஒரு ஆடம்பரமான ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட் காரை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய எஸ்யூவியின் காரின் விலை ரூ. 10 கோடி என்றும், இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள மிக விலையுயர்ந்த கார் இதுதான் என்றும் கூறப்படுகிறது.
காரின் ஷோரூம் விலை சுமார் ரூ. 8.20 கோடி மதிப்பாகும். இது ஆன் ரோடுக்கு வரும்போது கிட்டத்தட்ட 10 கோடி மதிப்பை பெறுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மும்பை தெருக்களில் 0555 என்ற நம்பர் பிளேட் கொண்ட கார் ஒன்றில் நடிகர் ஹாருக் கான் செல்வதை அவரது ரசிகர்கள் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோவும் இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
View this post on Instagram
மும்பை தெருக்களில் நேற்று இரவு ஷாருக் கான் ரோல்ஸ் ராய்ஸ் காரை ஓட்டு செல்வதை கண்டதாக கூறப்படுகிறது. இந்த SUV கார் ஆர்க்டிக் ஒயிட் பெயிண்ட் நிறத்தில் மின்னியுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ்:
ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் 6.75 லிட்டர் V12 பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சொகுசு எஸ்யூவியில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன.
Boycott gang said they will bring #SRK to sadak and they did exactly that brought him to Sadak in New Rolls Royce Cullinan Black Badge Car after #Pathaan became Blockbuster pic.twitter.com/8PWKpjwOFz
— Harminder 🍿🎬🏏 (@Harmindarboxoff) March 26, 2023
ஷாருக் கானின் அடுத்த திட்டம்:
ஷாருக் கான் தற்போது தென்னிந்திய திரைப்பட இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இதில் நயன்தாராவும் நடிக்கிறார். அதுமட்டுமின்றி, டாப்ஸி பன்னுவுடன் ராஜ்குமார் ஹிரானியின் டன்கி படத்திலும் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து, சல்மான் கானின் டைகர் 3 படத்தில் கேமியோ ரோலிலும் நடிக்க இருக்கிறார்.