Iraa Agarwal: ரித்திகா சிங் பாணியில் சின்னத்திரையில் ஒரு குத்துச்சண்டை நாயகி - யார் இந்த ஐரா அகர்வால்?
சினிமாவில் ரித்திகா சிங் எப்படி ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து நடிப்க்க வந்தாரோ, அவரது பாணியில் தானும் ஒரு குத்துச்சண்டை வீராங்கனைதான் என்பதை தெரிவித்திருக்கிறார் ஐரா.
வெள்ளித்திரையில் புதிய அறிமுகங்கள் இருக்கிறது இல்லையோ, சீரியலில் புதிய முகங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில், ஜீ தமிழ் சீரியல் ஒன்றில் அறிமுகமாகி மக்களின் மத்தியில் கவனத்தை பெற்றவர் ஐரா அகர்வால்.
சென்னையைச் சேர்ந்த மாடல் அழகியான அவர், தெலுங்கு சீரியலில் தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து சில ஹிட்டாகாத படங்களில் நடித்து தமிழ் சீரியலில் எண்ட்ரி தந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி சீரியல் மூலம் பிரபலமான அவர் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார்.
View this post on Instagram
சினிமாவில் ரித்திகா சிங் எப்படி ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து நடிப்க்க வந்தாரோ, அவரது பாணியில் தானும் ஒரு குத்துச்சண்டை வீராங்கனைதான் என்பதை தெரிவித்திருக்கிறார் ஐரா. சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருக்கும் ஐரா, மாடலிங், சீரியல், சினிமா என கலைத்துறையிலும் பிஸியாக பணியாற்றி வருகிறார்.
View this post on Instagram
விளையாட்டும், நடிப்பும் தனது இரு கண்கள் என தெரிவித்திருக்கும் இரண்டு துறைகளிலும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என தெரிவித்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டீவான அவர், அவ்வப்போது புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். அவை லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
மேலும் படிக்க: விஜயகாந்த், ஜெயலலிதாவை பார்த்து நாக்கை கடிக்கல.. நடந்த விஷயமே வேற.. - ராதாரவி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்