” எல்லாம் யோசித்துதான் முடிவு பண்ணுவேன்...காதலே பண்ணக்கூடாது” - சின்னத்திரை நடிகர் விக்னேஷ் !
"என்னை சுற்றி இருக்கும் நல்ல மனிதர்களைத்தான் நான் விலை மதிப்பில்லாதவர்களாக பெரிதாக நினைக்கிறேன்."
வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரை நடிகர்களுக்கும் இப்போது ஏகப்பட்ட ஆர்மிகள் உருவாகிவிட்டது. இதற்கு சமூக வலைத்தளங்களும் மிகப்பெரிய பங்காற்றுகின்றன. ஆனால் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் இல்லாத காலக்கட்டத்திலேயே பல இளம் பெண்களையும் கவர்ந்த நடிகர்தான் விக்னேஷ். சிலருக்கு கௌதம் என்றால்தான் பரீட்சியம். கனா கானும் காலங்கள் நெடுந்தொடர் மூலமாக அறிமுகமான விக்னேஷ் . அந்த தொடரில் அறிமுகமான ஹரிப்பிரியாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு கிரிஷ் என்ற மகனும் உள்ளார். தற்போது விவாகரத்து பெற்று தனித்தனியாக ஹரிப்பிரியாவும் விக்னேஷும் வாழ்ந்து வருகின்றனர். விக்னேஷ் தன்னுடை விவாகரத்திற்கு பிறகான வாழ்க்கையை மிகுந்த மன அழுத்ததுடன் அனுபவித்து வந்தார் . தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவர் பேசி பதிவிட்ட வீடியோக்களும் கூட சமூக வலைத்தளங்களில் வைரலானது.
View this post on Instagram
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னால் நேர்காணல் ஒன்றில் காதல் குறித்தும் தன் வேதனைகள் குறித்தும் பகிர்ந்துள்ளார் . அதில் “ எனக்கு மீடியா உலகில் கிட்டத்தட்ட 18 வருடங்கள் அனுபவம் இருக்கு. இயக்குநர் ஆக வேண்டும் என வந்தவன் நான். அதன் பிறகு நடிக்க வந்துவிட்டேன். என் வாழ்க்கையில இது நடந்துடுச்சே..நடக்காம இருந்திருக்கலாமோ அப்படினு நான் நினைத்ததே கிடையாது. எல்லாமே அனுபவம்தான்.அதனால கடந்து போக வேண்டியதுதான். என்னை சுற்றி இருக்கும் நல்ல மனிதர்களைத்தான் நான் விலை மதிப்பில்லாதவர்களாக பெரிதாக நினைக்கிறேன். நான் எல்லாரையும் சமமாக நினைப்பேன். உயர்ந்தவர் தாழ்ந்தவர் அப்படிங்குற வேறுபாடே கிடையாது. ரொம்ப பொறுமையாக இருப்பேன்.அதே நேரம் ரொம்ப கோவமும் வரும். நிறைய தடவை யோசித்துதான் எல்லா முடிவையும் எடுப்பேன். எவ்வளவு கோடி ரூபாய் கொடுத்தாலும் நேரத்தை இழக்க கூடாது. அதே போல புகைப்பிடிக்கக்கூடாதுனுதான் என் நிலைப்பாடு. காதலே பண்ணக்கூடாதுனுதான் நான் சொல்லுவேன். இருந்தாலும் காதல் வாழ்க்கையில நேர்மையாக இருக்கனும் உண்மையாக இருக்கனும். இன்னும் சிம்பிளாக சொல்லனும்னா உங்க மொபைல் பேட்டன் உங்க பார்ட்னருக்கும் , அவங்களோடது உங்களுக்கும் தெரியனும் அவ்வளவுதான் “ என தனது அனுபவங்களை பகிர்ந்துருக்கிறார் விக்னேஷ்.
View this post on Instagram