Selvaraghavan Naane Varuven: தம்பிக்கு போட்டியாக களமிறங்கிய செல்வராகவன்... 'நானே வருவேன்' அப்டேட்..!
செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் ‘நானே வருவேன்’ படத்தில் இருந்து போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். அவர் இயக்கிய காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற இடங்கள் பலரது ஃபேவரைட். அவர் தற்போது தனது தம்பியான தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கிவருகிறார். இதுவரை தனுஷும், செல்வராகவனும் இணைந்த படங்களான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன ஆகிய படங்கள் இன்றுவரை ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கின்றன. இதன் காரணமாக நீண்ட நாள் கழித்து இருவரும் இணைந்திருக்கும் நானே வருவேன் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் அனைத்து பாடல்களும் பதிவுசெய்யப்பட்டு விட்டதாக செல்வராகவன் முன்னமே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அண்மையில் இந்தப்படத்தில் இருந்து தனுஷின் இருவேறு புகைப்படங்கள் கொண்ட போஸ்டர் வெளியிடப்பட்டது.
View this post on Instagram
இந்த நிலையில் தற்போது செல்வராகவனின் பிறந்த நாளை முன்னிட்டு, நானே வருவேன் படத்தில் இருந்து புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
Thank you so much sir ! So Grateful
— selvaraghavan (@selvaraghavan) March 5, 2022
I'm at my teams disposal ! Their wish was for me to be in #NaaneVaruven . And their wish is my command @omdop @RVijaimurugan @dhilipaction https://t.co/vLrhBDpAaW
நடிப்பிலும் சிகரம் தொட வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், “ இயக்கத்தில் சிகரம் தொட்ட செல்வராகவன் நடிப்பிலும் சிகரம் தொட வாழ்த்துக்கள். ” என்று பதிவிட்டுள்ளார்.
அவர்கள் விருப்பம் எனது கட்டளை
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள செல்வராகவன், “ நன்றி சார். மிகவும் நன்றியுள்ளவர்களின் வசம் நான் இருக்கிறேன். நான் நானே வருவேன் படத்தில் நடிக்க வேண்டும் என்று அவர்கள் விருப்பப்பட்டார்கள். அவர்கள் விருப்பம் எனது கட்டளை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, செல்வராகவன் அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் “ சாணிக்காயிதம்” விஜயின் ‘பீஸ்ட்” உள்ளிட்ட படங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.