மேலும் அறிய

சீனு ராமசாமி எழுதிய சினிமாவின் ஆன்மா’ நூலை 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய அரசு ஆதரவு!

மத்திய அமைச்சர் திரு. எல். முருகனுடன் கவிஞரும் இயக்குநருமான சீனு ராமசாமி சந்திப்பு, தான் எழுதிய – ‘சினிமாவின் ஆன்மா’ நூலை 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய அரசு ஆதரவு!

சென்னை: கவிஞரும் பிரபல திரைப்பட இயக்குநருமான சீனு ராமசாமி அவர்கள்,  மாண்புமிகு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு. எல். முருகன் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, தான் எழுதிய ‘சினிமாவின் ஆன்மா (சிறார்கள் சினிமா ரசனைக் கல்வி)’ நூலின் சமகால சமூகத் தேவை குறித்து அமைச்சருடன் அவர் விரிவாகவும் ஆழமாகவும் விவாதித்தார்.

உலகக் குழந்தைகளின் சிறந்த திரைப்படங்கள் மற்றும் இந்தியாவில் எடுக்கப்பட்ட நேர்த்தியான, உலக சினிமா தரத்திலான மிகச் சிறந்த சிறார் திரைப்படங்களைத் தொகுத்து, சிறார்களின் சினிமா ரசனையை ஒரு முறையான வாழ்வியல் கல்வியாக மாற்றுவதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும்.

இச்சந்திப்பின் போது இக்கல்வியின் கட்டாயத் தேவை குறித்து இயக்குநர் சீனு ராமசாமி விளக்கிக் கூறுகையில்:
"ஒரு குழந்தை 8 வயது வருவதற்குள் உடல் ஆரோக்கியத்திற்காக 35 தடுப்பூசிகளுக்கு மேல் போடுகிறோம். அதுபோல, அவர்களின் மன ஆரோக்கியத்திற்கும் ரசனை வளர்ச்சிக்கும் இந்த சினிமா ரசனை கல்வி ஒரு முக்கியத் தடுப்பூசியாக இருக்கும். இது பிஞ்சு மனங்களிலே நஞ்சு கலக்காமல் தடுத்து, கிராமப்புற எளிய மாணவ, மாணவியர் அனைவருக்கும் அசல் சினிமாவை அறிந்து, தர்க்கபூர்வமான சிந்தனையாளர்களாக வளர வழிவகுக்கும். இந்த பரந்த பாரத தேசத்தின் குழந்தை மனங்களில் நல் உணர்வுகளை பிள்ளை பிராயத்திலேயே வளர்க்க சினிமா ரசனை கல்வி பெரிதும் உதவும்" என்றார்.

இயக்குநர் சீனு ராமசாமி தொகுத்துள்ள உலகத்தரம் வாய்ந்த சிறார் திரைப்படங்களின் விவரங்களையும், நூலின் உன்னத நோக்கத்தையும் மிகுந்த சிரத்தையோடு கேட்டு அறிந்த மாண்புமிகு அமைச்சர் திரு. எல். முருகன் அவர்கள் பெரிதும் மகிழ்ந்தார். "இத்தகைய முயற்சி இந்த நாட்டுக்கு மிக முக்கியமானது; இதன் மூலம் நம் நாட்டு குழந்தைகளுக்கு மிகப்பெரிய நன்மையை நாம் செய்வோம்" என்று பாராட்டிய அமைச்சர் அவர்கள், ஒட்டுமொத்த இந்தியக் குழந்தைகளும் பயனடையும் வகையில், இந்நூலை இந்தியாவின் முக்கிய 25 மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களையும், ஏற்பாடுகளையும் மத்திய அரசு சார்பில் செய்வதாக நெஞ்சார வாக்குறுதி அளித்து வாழ்த்தினார்.

மத்திய அரசின் இந்த மகத்தான அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, "சினிமா ரசனை கல்வி இந்தியா முழுக்கச் செல்வதற்கு, ஒட்டுமொத்த இந்தியக் குழந்தைகளின் கரங்களால் மாண்புமிகு அமைச்சரின் கரங்களைப் பற்றி நான் என் நன்றியைக் கூறினேன்" என இயக்குநர் சீனு ராமசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

உருவகேலி செய்த சீனியர் நடிகர்...வேதனை பகிர்ந்த நடிகர் ரமேஷ் திலக்
உருவகேலி செய்த சீனியர் நடிகர்...வேதனை பகிர்ந்த நடிகர் ரமேஷ் திலக்
ஒருபக்கம் இயக்கம் இன்னொரு பக்கம் நடிப்பு..நாயகனாக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்
ஒருபக்கம் இயக்கம் இன்னொரு பக்கம் நடிப்பு..நாயகனாக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்
Prashanth: ரீல்ஸ் மூலம் ட்ரெண்டாகும் பாடல்கள்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகர் பிரஷாந்த்!
Prashanth: ரீல்ஸ் மூலம் ட்ரெண்டாகும் பாடல்கள்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகர் பிரஷாந்த்!
Mysskin:
Mysskin: "ட்ரெயின் படம் நல்லா இல்லனா செருப்பை கழட்டி அடிங்க.." இயக்குனர் மிஷ்கின்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
India Condemn Hormuz Attack: ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 vs புல்லட் 350: மைலேஜ், விலை,டிசைன்- எது பெஸ்ட்? முழு ஒப்பீடு
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 vs புல்லட் 350: மைலேஜ், விலை,டிசைன்- எது பெஸ்ட்? முழு ஒப்பீடு
EPS:
EPS: "விஜய்தான் களவாணி.." தவெக ஆட்சியை தாறுமாறாக விமர்சித்த இபிஎஸ்!
மக்கள் சொத்தை காப்பத்த முடியல.. உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி.? திமுகவிடம் சிக்கிய அமைச்சர் ரமேஷ்
மக்கள் சொத்தை காப்பத்த முடியல.. உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி.? திமுகவிடம் சிக்கிய அமைச்சர் ரமேஷ்
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
Embed widget