Tourist Family : ஒரே டீசரில் எல்லாரையும் கவர்ந்த சசிகுமார்... மலையாள பட ஸ்டைலில் உருவாகியுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி
சசிகுமார் சிம்ரன் நடித்துள்ல டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ள நிலையில் இந்த டீசர் பரவலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
சசிகுமார்
சுப்ரமணியபுரம் போன்ற கிளாசிக் படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் சசிகுமார் . பொருளாதார நெருக்கடிகளால் இவரால் அடுத்தடுத்து படங்களை இயக்க முடியாமல் போனது. ஆனால் தொடர்ச்சியாக பல்வேறு நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் நாடோடிகள் , அயோத்தி , கருடன் , சமீபத்தில் வெளியான நந்தன் ஆகிய படங்கள் பெரியளவில் வெற்றிப்படங்களாக அமைந்தன. தற்போது சசிகுமார் நடித்துள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி.
டூரிஸ்ட் ஃபேமிலி
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் , சிம்ரன் , மிதுன் ஜெய் ஷங்கர் இணைந்து நடித்துள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி. குட் நைட் , லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டீசர் நேற்று டிசம்பர் 6 ஆம் தேதி வெளியானது.
இலங்கையில் இருந்து இரவோடு இரவாக தனது மகன்கள் மற்றும் மனைவியோடு தப்பியோட நினைக்கிறார் சசிகுமார். வீட்டை காலி செய்யும்போது டீத்தூள் முதல் கடிகாரம் வரை எல்லாவற்றையும் பேக் செய்யும் மனைவி , காதலி ஷிலோ இல்லாமல் வரமாட்டேன் என அடம்பிடிக்கும் மூத்த மகன், ஊரை விட்டு ஓடப்போகும் செய்தியை ஊருக்கே தெரிவித்துவிட்டு வந்திருக்கும் குட்டிச் சிறுவன் என இந்த டீசர் முழுவதும் நகைச்சுவான தருணங்களால் நிறைந்துள்ளது. முதல் பார்வைக்கு முழுக்க முழுக்க காமெடி படமாக தெரிந்தாலும் படத்தில் உணர்ச்சிகரமான நிறைய தருணங்கள் இருக்கும் என்பதை மில்லிய டாலர் தயாரித்த முந்தைய படங்களை வைத்து சொல்லலாம்.
Presenting the Fun-filled First Look & TITLE TEASER of @SasikumarDir & @SimranbaggaOffc starring #TouristFamily ❤️✨
— Million Dollar Studios (@MillionOffl) December 6, 2024
Title Teaser 🔗 https://t.co/8VyQnpOaIZ
A perfect family entertainer, packed with laughter and feel-good moments. 🥳🎉
Written & directed by @abishanjeevinth 🎬… pic.twitter.com/wUVnoY7qwi
அயோத்தி படம் சசிகுமாரின் கரியரில் ஒரு நல்ல கம்பேக் படமாக அமைந்தது. அதற்கு பின் சமீபத்தில் வெளியாக நந்தன் திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக பெரியளவில் வெற்றிபெறவில்லை . தற்போது டூரிஸ்ட் ஃபேமிலி படம் அவருக்கு கமர்ஷியல் ரீதியாக வெற்றியையும் பாராட்டுக்களையும் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கலாம்.