அடுத்த லெவலுக்கு தயார்...10 ஆண்டுகளுக்கு பின் இணையும் சந்தானம் ஆர்யா கூட்டணி
சேட்டை , பாஸ் என்கிற பாஸ்கரன் , வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்து டிடி ரிடர்ன்ஸ் படத்தில் நடிக்க இருக்கிறார்கள்

சந்தானம்
விஜய் தொலைக்காட்சி லொல்லு சபாவில் தனது கரியரைத் தொடங்கி தமிழ் சினிமாவில் காமெடியனாக என்ட்ரி கொடுத்தவர் சந்தானம். சின்ன சின்ன ரோல்களில் தொடங்கி சந்தானம் இல்லாத படமே இல்லை என்கிற அளவிற்கு தமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக வலம் வந்தார். சிவா மனசுல சக்தி , பாஸ் என்கிற பாஸ்கர் , ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்கள் இவரது கரியரில் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன. காமெடியனைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். கண்ணா லட்டு திங்க ஆசையா , ஏ 1 ஆகிய படங்கள் அவருக்கு வெற்றியைக் கொடுத்தாலும் அவர் நடித்த மற்ற படங்கள் பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை
டிடி டிடர்ன்ஸ்
சந்தானம் நடித்த ஹாரர் திரைப்படமான தில்லுக்கு துட்டு திரைப்படம் நல்ல ஃபேமிலி என்டர்டெயினராக அமைந்தது. இதனைத் தொடர்ந்து வெளியான தில்லுக்கு துட்டு திரைப்படம் முதல் பாகத்தை விட இரு மடங்கு வெற்றிபெற்றது. கடந்த 2023 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் டி.டி ரிடர்ன்ஸ் படம் பெரிய வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
மீண்டும் இணையும் ஆர்யா சந்தானம் கூட்டணி
பிரேம் ஆனந்த் இப்படத்தை இயக்கும் நிலையில் பல வருடங்கள் கழித்து ஆர்யாவும் சந்தானமும் மீண்டும் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இது தவிர்த்து இயக்குநர் கெளதம் மேனன் , செல்வராகவன் உள்ளிட்டவர்களும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் அறிவிப்பை வெளியிடும் விதமாக சந்தானம், ஆர்யா , மற்ற இருவரும் சேர்ந்து நெக்ஸ் லெவலுக்கு நாங்கள் ரெடி என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்கள்.
Is #DDReturns2 Titled DD Returns: #NextLevel ⁉️#Santhanam - #Arya - #selvaraghavan - #GVM - Kasturi
— Black Town (@townblack71) January 20, 2025
Maybe It's Teaser Time For #DDReturns pic.twitter.com/qA62fqbYc6
சந்தானம் நடித்த மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. மீண்டும் சந்தானம் காமெடியனாக நடிக்க வர வேண்டும் என படத்தின் இயக்குநர் சுந்தர் சி மற்றும் ரசிகர்களும் தங்கள் ஆசையை தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் மீண்டும் சந்தானமும் ஆர்யாவுன் இணைந்து நடிப்பது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது





















