Redin Kingsley: அட.. பிஸ்னஸ் மேனாகவும் கலக்கும் ரெடின் கிங்ஸ்லி.. சொத்து மதிப்பு இவ்வளவா!
நடிகை சங்கீதாவை மணந்த ரெடின் கிங்ஸ்லி வெறும் காமெடி நடிகர் மட்டும் அல்ல, பிஸ்னஸ் மேனும் கூட. அவர் செய்யும் பிஸ்னஸ் குறித்துப் பார்க்கலாம்.
![Redin Kingsley: அட.. பிஸ்னஸ் மேனாகவும் கலக்கும் ரெடின் கிங்ஸ்லி.. சொத்து மதிப்பு இவ்வளவா! sangeetha redin kingsley wedding bussiness man kingsley comedy actor Redin Kingsley: அட.. பிஸ்னஸ் மேனாகவும் கலக்கும் ரெடின் கிங்ஸ்லி.. சொத்து மதிப்பு இவ்வளவா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/12/83776bb4285e2b409fb8a5673a1244df1702363384933571_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான ரெடின் கிங்ஸி கோலமாவு கோகிலா,டாக்டர் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். மேலும் அவர், அண்ணாத்த, ஜெய்லர், பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரின் வித்தியாசமான பாடிலேங்வேஜ் மற்றும் காமெடிக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு.
நடிகை சங்கீதா-ரெடின் கிங்ஸ்லி திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பல சுவாரஸ்யமான தகவல்களை வீடியோவில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: “ரெடின் கிங்ஸ்லிக்கு சினிமாவில் வரவேண்டும் என்ற ஆசை இருந்ததால், நடனம் கற்றார். பின்னர் படத்தில் க்ரூப் டான்சராக இருந்தார். ஆனால், அவர் கொஞ்சம் குள்ளமாக இருந்ததால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து,நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் ரெடின் கிங்ஸ்லி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
காதல் திருமணம்
அவருக்கு நேற்று முன்தினம் நடிகை சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தகவலை கேள்வி பட்டு அவருக்கு போன் செய்து பேசினேன். போனை எடுத்த ரெடின், நாங்கள் நீண்ட நாட்களாக காதலித்து வந்தோம், அவரும் என்னை திருமணம் செய்து கொள் என்று கேட்டுக்கொண்டே இருந்ததால், திருமணம் செய்து கொண்டேன் என்று கூறினார்.
முதல் திருமணமா?
ரெடின் கிங்ஸ்லிக்கு 46வயசு ஆவதால், இது தான் முதல் திருமணமா என்று பேசப்படுகிறது. சங்கீதா மற்றும் ரெடின் கிங்ஸ்லி இருவருக்கும் இது தான் முதல் திருமணம். துணை நடிகையாக இருந்த சங்கீதா திருமகள் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கிங்ஸ்லி ஆரம்ப காலத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தபோதே இருவரும் காதலித்து வந்த நிலையில், பல ஆண்டுகள் கழித்து தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
பிஸினஸ் மேன் கிங்ஸ்லி
ரெடின் கிங்ஸ்லி படங்களில் வரும் வெறும் காமெடி நடிகர் மட்டுமல்ல. அவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பில் இருந்தே பிசினஸ் மேன். இவர் ஸ்பெல்போன் என்ற மிகப்பெரிய ஈவன்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியை வைத்துள்ளாராம். பொருட்காட்சி, கண்காட்சிகளில் இடம்பெறும் பெரிய ஜெயண்ட் வீல்ஸ், கிட்ஸ் விளையாடும் செட் அப்புகள் என எல்லாமே பண்றது கிங்ஸ்சோட கம்பெனி தானாம். மேலும் இவரின் சொத்து மதிப்பு 40லிருந்து 50 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.
நடிகர் கிங்ஸ்லி-சங்கீதா திருமணம் குறித்து சங்கீதாவிற்கு மெஹந்தி போட்ட ஆர்டிஸ்ட் ஷஷி யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ஷஷி பேசியுள்ளதாவது:
சங்கீதா செம கேரிங்
”சங்கீதா- கிங்ஸ்லி திருமணத்திற்கு நெறுக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே அழைத்தனர். கிங்ஸ்லியை நான் ஒரு முறை பார்த்தேன். அவரோட ஒரு பைவ் மினிட்ஸ் இருந்தாலே, சார் ப்ளீஸ் சிரிப்பு காட்டாம இருங்க,பிகாஸ் மெகஹந்தி போட்டுட்டு இருக்கேன் அப்டினு இருந்தது. சங்கீதா மேம் பயங்கர கேரிங். ”நான் தர்ட் பார்சன் தானே, ஆனாலும் கேரிங் -ஆ இருப்பாங்க”.
அவங்க லவ்-ல உள்ள பியூட்டிபுல்லான மூமெண்ட் எதாவது தெரியுமா என்ற கேள்விக்கு, கிங்ஸ்லி சார் பயங்கர இன்னசெண்ட். அவங்க மேரேஜ் -க்கு ட்ரெஸ் பர்ச்சேஸ் பன்னதுக்கு அப்றம், அப்பா...மேரேஜ் ஷாப்பிங் முடிஞ்சிடுச்சி பா எனக்கு, அப்டி இருக்காரு. மேரேஜ் இனிடியேட்டிவ் எல்லாமே எடுத்தது சங்கீதா மேம் தான்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)