Samantha Workout Video: அடேய் வொர்க் அவுட் செய்ய விடுங்கடா.. செல்லப்பிராணிகளுடன் வொர்க் அவுட் செய்யும் சமந்தா.. வைரலாகும் வீடியோ..!
சமந்தா வொர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
![Samantha Workout Video: அடேய் வொர்க் அவுட் செய்ய விடுங்கடா.. செல்லப்பிராணிகளுடன் வொர்க் அவுட் செய்யும் சமந்தா.. வைரலாகும் வீடியோ..! Samantha Ruth Prabhu Gym workout session interrupted by her pets video posted on instagram- Watch Samantha Workout Video: அடேய் வொர்க் அவுட் செய்ய விடுங்கடா.. செல்லப்பிராணிகளுடன் வொர்க் அவுட் செய்யும் சமந்தா.. வைரலாகும் வீடியோ..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/09/1dd6a7d81a9956d34aef22de70edbd05_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சமந்தா, பிரபல மாடலான ஷில்பா ரெட்டியுடன் பத்ரிநாத், ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றார். அதனைத் தொடர்ந்து சமந்தா கோவா சென்றார். இதனையடுத்து சுவிட்சலார்ந்துக்கு சென்ற சமந்தா, அங்கு பனிச்சறுக்கில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சமந்தா, “ சிறிய மேட்டின் மீது குழந்தைகளோடு எனது பனிச்சறுக்கு பயிற்சியைத் தொடங்கினேன். ஒரு நூறு முறை கீழே விழுந்திருப்பேன். ஒவ்வொரு முறையும் மீண்டும் எழுந்தேன். இதனை விட்டுவிடலாம் என்ற எண்ணம் என் மனதில் பல முறை தோன்றினாலும், நான் என்னையே சமாதானம் செய்து மீண்டும் முயன்றேன். காலப் போக்கிலும், கடும் முயற்சிக்குப் பிறகும் சிறிய மேட்டில் இருந்து தற்போது பனிச்சறுக்கு வல்லுநர்கள் விளையாடும் ரெட் ரன்னை முடித்து, என்னை நானே ஸ்பெஷலாக உணர்கிறேன்’ என்று பதிவிட்டு இருந்தார்.
View this post on Instagram
அதே போல பிட்னஸிலும் அதிக கவனம் செலுத்தி வரும் சமந்தா, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இது மட்டுமன்றி தனது ஸ்டோரி பக்கத்திலும் பிட்னஸ் மோட்டிவேஷன் சார்ந்த தகவல்களை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் வொர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சமந்தா வொர்க் அவுட் செய்து கொண்டிருக்கும் போது, அவரது செல்லப்பிராணிகள் அவரை வொர்க் அவுட் செய்யவிடாமல் தடுக்கின்றன. ஆனாலும் சமந்தா விடாமல் வொர்க் அவுட் செய்கிறார்.
View this post on Instagram
சமந்தா, நடிகர் தேவ் மோகன் நடிப்பில் உருவாகியிருக்கும் `சகுந்தலம்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இது மட்டுமன்றி ‘Arrangements of Love’ நாவலை தழுவி உருவாக்கப்படும் வெப் தொடரிலும் அவர் கமிட் ஆகியுள்ளார். இந்தப்படத்தை ஹாலிவுட் இயக்குனர் பிலிப்ஜான் இயக்குவது குறிப்பிடத்தக்கது.
Also Read | Gautham Karthik Manjima Wedding: மஞ்சிமா மோகனை திருமணம் செய்யும் கெளதம் கார்த்திக்.. முழு விபரம் உள்ளே..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)