Samantha Reply: “உங்களுடன் ‘அது’ செய்யணும்.. எனக்கு ஆசையா இருக்கு” - கேள்வி கேட்ட ரசிகருக்கு நறுக் பதில் கொடுத்த சமந்தா..!
Samantha Reply to Fan: இன்ஸ்டாவில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, சமந்தா அளித்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாகசைதன்யாவுடனான பிரிவிற்கு பிறகு தனது தோழியுடன் பல இடங்களுக்கு சுற்றுலா சென்ற சமந்தா, தற்போது தனது கேரியரில் முழுகவனம் செலுத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவாக இருக்கும் சமந்தா, தான் செல்லும் ஊர்கள் தொடர்பான புகைப்படங்கள், படத்தகவல்கள் மட்டுமல்லாது தனது பர்சனல் விஷயங்கள் தொடர்பாகவும் தொடர்ந்து அதில் பகிர்ந்து வருகிறார். இது மட்டுமல்லாது அவ்வப்போது இன்ஸ்டாவில் லைவ் வரும் சமந்தா ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கும் பதிலளித்து வருகிறார்.
ரசிகர் கேட்ட கேள்வி
அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாவில் லைவ் வந்த சமந்தா ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், (“Have you reproduced cuz I wanna reproduce u” ) நீங்கள் இனபெருக்கத்திற்கு உள்ளாகிவிட்டீர்களா.. உங்களுடன் இனப்பெருக்க செய்ய ஆசையாகயிருக்கிறது என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த சமந்தா, “ முதலில் reproduce என்ற வார்த்தையை எந்த சென்டன்ஸில் பயன்படுத்த வேண்டும் என்பதை கூகுலில் செக் செய்து விட்டு வா” என்று பதிலளித்திருக்கிறார்.
சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சகுந்தலா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இந்தப்படத்திற்கு 3 கோடி செலவில் செட் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.
View this post on Instagram
இது குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ணபிரசாத் கூறியதாவது.., “சமந்தா நாயகியாக நடிக்கும் எங்களின் பிரமாண்ட படைப்பான ‘யசோதா’ படத்தின் கதை 30 முதல் 40% காட்சிகள் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தான் நடக்கிறது.
இதற்காக நாங்கள் பல நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சென்றோம், ஆனால் இதுபோன்ற ஹோட்டல்களில் 35, 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது மிக சிரமமாக இருந்தது. எனவே, கலை இயக்குனர் அசோக்கின் மேற்பார்வையில் நானக்ராம்குடாவின் ராமாநாயுடு ஸ்டுடியோவில் 3 கோடி மதிப்பிலான 2 மாடிகள் கொண்ட பிரமாண்ட செட் ஒன்றைத் அமைக்க முடிவு செய்தோம். இதில் 7 முதல் 8 செட் டைனிங் ஹால், லிவிங் ரூம், கான்ஃபரன்ஸ் ஹால், லைப்ரரி என ஒரு 7 ஸ்டார் நட்சத்திர ஹோட்டலில் உள்ள அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டது.
பிப்ரவரி 3-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கி, சமந்தா, வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் ஆகியோரின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. டிசம்பர் 6 முதல் கிறிஸ்மஸ் வரை முதல் கட்டப் படப்பிடிப்பு முடித்து, ஜனவரி பொங்கலுக்கு முன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்திருக்கிறது." என்றார்.