மேலும் அறிய

ரூ. 5 கோடி வேண்டும்; இல்லையேல் உங்கள் மரணம் இப்படித்தான்! - சல்மான் கானுக்கு வந்த புது மிரட்டல்!

என்சிபி தலைவர் பாபா சித்திக்கிற்கு வந்த தலைவிதி வராமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.5 கோடி தர வேண்டும் என நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. 

நடிகர் சல்மான் கானுக்கு புது கொலை மிரட்டல் வந்துள்ளது. அதில் ரூ. 5 கோடி தர வேண்டும் எனவும் இல்லையேல் என்சிபி தலைவர் பாபா சித்திக் கொல்லப்பட்டது போல் நீங்களும் கொல்லப்படுவீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் மும்பையில் என்சிபி தலைவர் பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக வோர்லி காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணில் இந்த மெசேஜ் வந்தது. “சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால், லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வர விரும்பினால், அவர் ரூ. 5 கோடி கொடுக்க வேண்டும். பணம் கொடுக்கவில்லை என்றால், பாபாவை விட சல்மான் கானின் நிலை மோசமாகிவிடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த 12 ஆம் தேதி மும்பையின் உயர்மட்ட பாந்த்ராவில், அவரது எம்.எல்.ஏ மகன் ஜீஷனின் அலுவலகத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக குர்மெயில் சிங் மற்றும் தரம்ராஜ் காஷ்யப் ஆகிய இரு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் உட்பட 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடிகர் சல்மான் 1998 ஆம் ஆண்டு இரண்டு மான்களை வேட்டையாடி கொன்றது தொடர்பாக கடந்த சில மாதங்களாக பிஷ்னோய் கும்பலிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல்களை சந்தித்து வருகிறார். இதனிடையே சல்மான் கானுக்கு Y+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது மற்றும் கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வெளியே ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். புதன்கிழமை, நவி மும்பை காவல்துறை மற்றும் மாநில காவல்துறையின் கூட்டு நடவடிக்கையால் கும்பலைச் சேர்ந்த ஒருவர் ஹரியானாவின் பானிபட்டில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் சுகா கலூயா என்பதும் இவர் சல்மான் கானை கொலை செய்ய பணியமர்த்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. ஏப்ரல் 14 அன்று, இரண்டு துப்பாக்கி சுடும் வீரர்கள் சல்மானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து மும்பை காவல்துறை ஒரு குற்றப்பத்திரிகையில் சிறையில் உள்ள குண்டர்கள் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு துப்பாக்கி சுடும் நபர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் அறிவிப்பு!
Breaking News LIVE 18th OCT 2024: கிரீன் மேஜிக் பிளஸ் பால் திட்டத்தைக் கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
Breaking News LIVE 18th OCT 2024: கிரீன் மேஜிக் பிளஸ் பால் திட்டத்தைக் கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் சித்திரவதை; காலணியை மாணவி மீது வீசி கொடூரம்
நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் சித்திரவதை; காலணியை மாணவி மீது வீசி கொடூரம்
பச்சை நிற பால் மாற்றப்பட்டு, விலை உயர்வா?- ஆவின்‌ நிறுவனம்‌ மறுப்பு‌
பச்சை நிற பால் மாற்றப்பட்டு, விலை உயர்வா?- ஆவின்‌ நிறுவனம்‌ மறுப்பு‌
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் அறிவிப்பு!
Breaking News LIVE 18th OCT 2024: கிரீன் மேஜிக் பிளஸ் பால் திட்டத்தைக் கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
Breaking News LIVE 18th OCT 2024: கிரீன் மேஜிக் பிளஸ் பால் திட்டத்தைக் கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் சித்திரவதை; காலணியை மாணவி மீது வீசி கொடூரம்
நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் சித்திரவதை; காலணியை மாணவி மீது வீசி கொடூரம்
பச்சை நிற பால் மாற்றப்பட்டு, விலை உயர்வா?- ஆவின்‌ நிறுவனம்‌ மறுப்பு‌
பச்சை நிற பால் மாற்றப்பட்டு, விலை உயர்வா?- ஆவின்‌ நிறுவனம்‌ மறுப்பு‌
எந்த மொழிக்கும் தேசிய அந்தஸ்து இல்லை; பிற மொழிகளை சிறுமைப்படுத்துவதா?- இந்தி மாத கொண்டாட்டம் குறித்து முதல்வர் பிரதமருக்குக் கடிதம்
எந்த மொழிக்கும் தேசிய அந்தஸ்து இல்லை; பிற மொழிகளை சிறுமைப்படுத்துவதா?- இந்தி மாத கொண்டாட்டம் குறித்து முதல்வர் பிரதமருக்குக் கடிதம்
TN Rain Alert: தமிழகமே..! இன்று 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Alert: தமிழகமே..! இன்று 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் - வானிலை மையம் எச்சரிக்கை
IND vs NZ 1st Test:இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்; நியூசிலாந்து ஆல் அவுட்!விட்டதை பிடிக்குமா இந்தியா?
IND vs NZ 1st Test:இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்; நியூசிலாந்து ஆல் அவுட்!விட்டதை பிடிக்குமா இந்தியா?
 “துரோகம்” தியாகம் பற்றி பேசுவதா?- அதலபாதாளம் சென்ற அதிமுக- ஈபிஎஸ்ஸை மறைமுகமாக சாடிய ஓபிஎஸ்
 “துரோகம்” தியாகம் பற்றி பேசுவதா?- அதலபாதாளம் சென்ற அதிமுக- ஈபிஎஸ்ஸை மறைமுகமாக சாடிய ஓபிஎஸ்
Embed widget