Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.
”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்..
நான்கு நாட்களாக என்ன பன்னிட்டு இருக்கீங்க நான் ஆய்விற்கு வரும் வரை மழை நீரை எடுக்காமல் இருப்பீங்களா என விழுப்புரம் நகராட்சி ஆணையரை அமைச்சர் பொன்முடி லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் நகர பகுதியான தாமரை குளம், பாண்டியன் நகர் கட்டபொம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாய்கால்களை தூர் வாறும் பணியை நகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. வாய்க்கால் தூர்வாறும் பணியை வனத்துறை அமைச்சர் பொன்முடி மாவட்ட ஆட்சியர் பழனி ஆய்வு செய்தனர். கட்டபொம்மன் நகர் பகுதியில் அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தபோது சாலையோரம் உள்ள காலிமனை பகுதியில் தேங்கி இருந்த மழை நீரை அகற்றாமல் இருந்ததை கண்ட அமைச்சர் பொன்முடி கோபமடைந்தார். நான்கு நாட்களாக என்ன பன்னிட்டு இருக்கீங்க நான் ஆய்விற்கு வரும் வரை மழை நீரை எடுக்காமல் இருப்பீங்களா என்னதான் பன்னீட்டு இருக்கீங்க என நகராட்சி ஆணையர் வீரமுத்துகுமாரை கடுமையாக சாடினார் அமைச்சர். இதனால் ஆய்வின் போது சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.