IND vs NZ 1st Test:இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்; நியூசிலாந்து ஆல் அவுட்!விட்டதை பிடிக்குமா இந்தியா?
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி 402 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி 402 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது நியூசிலாந்து அணி. இதில், முதல் டெஸ்ட் போட்டி நேற்று (அக்டோபர் 17) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இது இந்திய அணிக்கு எதிராக அமைந்தது. அதாவது முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நியூசிலாந்து ஆல் அவுட்:
இதனைத் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கியது நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம் மற்றும் டெவோன் கான்வே களம் இறங்கினார்கள். கேப்டன் டாம் லாதம் 15 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க கான்வே நிதானமாக விளையாடினார். அடுத்து வந்த வில் யங் 33 ரன்களி விக்கெட்டை இழக்க கான்வே உடன் கூட்டணி அமைத்த ரச்சின் ரவீந்திரா சிறப்பாக விளையாடினார். அதன்படி 124 பந்துகளில் சதத்தை பதிவு செய்தார்.
பின்னர் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தாலும் ரச்சின் ரவீந்திரா சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்தி நியூசிலாந்து அணிக்கு ரன்களை சேர்த்தார். மறுபுறம் டிம் சவுதி 66 ரன்களை குவித்தார். ரச்சின் ரவீந்திரா 134 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க 402 ரன்களில் ஆல் அவுட் ஆனது நியூசிலாந்து அணி. இந்தியாவை விட நியூசிலாந்து அணி 356 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. தற்போது இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.