(Source: ECI/ABP News/ABP Majha)
Breaking News LIVE 18th OCT 2024: சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை முதல் வழக்கம்போல் இயங்கும்!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.
LIVE
Background
- ஏர் இந்தியா உள்பட 10 விமானங்களுக்கு நேற்று ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல் – போலீசார், அதிகாரிகள் தீவிர விசாரணை
- கடந்த நான்கு நாட்களாக இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – மத்திய உளவுத்துறை தீவிர விசாரணை
- ஜஸ்டின் ப்ரூடோவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டால் இந்திய – கனட உறவில் விரிசல் – இந்தியா கருத்து
- லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையவர்களை நாடு கடத்த கனடா மறுப்பு
- சென்னை மற்றும் புறநகரில் இன்று அதிகாலை மிதமான மழை
- தொடர் மழை பெய்த கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் 14 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றம் – மாநகராட்சி தகவல்
- அசாமில் விரைவு ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டது – விபத்து நடந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
- நாட்டின் வளர்ச்சி ஏழைகளை அதிகாரமிக்கவர்களாக மாற்றுகிறது – பிரதமர் மோடி பேச்சு
- சண்டிகரில் நடைபெற்ற முதலமைச்சர், துணை முதலமைச்சர் கூட்டத்தில் பங்கேற்காத நிதிஷ்குமார் – என்.டி.ஏ. கூட்டணியில் சலசலப்பு
- சூதாட்ட செயலியில் நடித்த விவகாரம் ; நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை 5 மணி நேரம் விசாரணை
- மும்பையில் தைவான் நாட்டு தூதரகம் திறக்கப்பட்டதற்கு சீனா கடும் எதிர்ப்பு
- தைவான் விவகாரத்தை இந்தியா விவேகத்துடன் கையாள வேண்டும் – சீனா எச்சரிக்கை
- மத்திய அரசின் நேரடி வரி வசூல் ரூபாய் 19.60 லட்சம் கோடி – கடந்த 10 ஆண்டுகளில் 182 சதவீதமாக அதிகரிப்பு
- வயநாடு இடைத்தேர்தல்; காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்காவை எதிர்த்து சத்யன் போட்டி
- மகாராஷ்ட்ரா சட்டமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்
- மகாராஷ்ட்ரா சட்டமன்ற தேர்தல் தொகுதி குறித்து இந்தியா கூட்டணி தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் அகிலேஷ் யாதவ்
- ரயில்களில் முன்பதிவு செய்யும் கால வரைவு 120 நாட்களில் 60 நாட்களாக குறைவு
- உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயர் பரிந்துரை
- உத்தரபிரதேச சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு 2 தொகுதிகளை தர சமாஜ்வாதி திட்டம்
- யு.ஜி.சி. நெட் தேர்வு முடிவுகள் வெளியானது; பாடவாரியாக கட் ஆஃப் மதிப்பெண்கள் வெளியீடு
- மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா
Breaking News LIVE 18th OCT 2024: 'கலைஞர் நூற்றாண்டு பூங்கா' நாளை (அக்.19) முதல் வழக்கம்போல் இயங்கும்!
'கலைஞர் நூற்றாண்டு பூங்கா' நாளை (அக்.19) முதல் வழக்கம்போல் இயங்கும்!#KalaingarPark #chennai #tamilnadu #tamilnews pic.twitter.com/8hxoNqvnEu
— ABP Nadu (@abpnadu) October 18, 2024
கிரீன் மேஜிக் பிளஸ் பால் திட்டத்தைக் கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
ஆவின் பச்சை உறை பாலின் பெயரை மாற்றி, லிட்டருக்கு ரூ.11 உயர்த்தி விற்பது பகல் கொள்ளை:
”கிரீன் மேஜிக் பிளஸ் பால் திட்டத்தைக் கைவிட வேண்டும்..” : பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
இந்தி திணிப்பு - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
இந்தி திணிப்பு - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இந்தி மாதம் நிறைவு நாள் கொண்டாடப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை
முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவிப்பு
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவிப்பு. இந்திய அணியை விட 356 ரன்கள் முன்னிலையில் உள்ளது நியூசிலாந்து. அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 134 ரன்களை குவித்து அவுட் ஆனார். குல்தீப் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் NZ 402 | IND 46 & 2/0 (1)
OTT Case : ஒழுங்குபடுத்த தனி குழு அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை தணிக்கை செய்ய, ஒழுங்குபடுத்த தனி குழு அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!