Sai Pallavi : ஆன்மீகம்.. காளியைப் பத்தி இப்படி நினைக்கிறேன்.. மனம் திறந்த சாய் பல்லவி
சாய் பல்லவி, காளி வெங்கட் மற்றும் பலர் நடித்து ஜீலை 15-ஆம் தேதி வெளியாக உள்ள படமான கார்கி திரைபடத்தின் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில் அது திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை மக்களிடையே பெரிதும் கூட்டியுள்ளது
சாய் பல்லவி, காளி வெங்கட் மற்றும் பலர் நடித்து ஜூலை 15-ஆம் தேதி வெளியாக உள்ள படமான கார்கி திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில் அது திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை மக்களிடையே பெரிதும் கூட்டியுள்ளது.
ஏனெனில், இத்தனை ஆண்டு காலமாக சாய் பல்லவியை க்யூட்டாகவே பார்த்து பழகிய மக்கள் கார்கி டிரெய்லரில் ஒரு உணர்ச்சிகரமான சாய் பல்லவியை பார்த்தவுடன் படம் குறித்த எதிர்ப்பார்பை அதிகப்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து இதோ சாய் பல்லவி கொடுத்த நேர்காணல்.....
கேள்வி: வணக்கம் சாய் பல்லவி. கார்கி திரைபடத்தில் கார்கி என்ற கதாபாத்திரத்திற்கு நீங்க எவ்ளோ உயிர் குடுத்திருக்கீங்க?
சாய் பல்லவி: பொதுவாவே நா ரொம்ப ஜாலியான டைப். ஆனா இது ரொம்பவே சீரியஸ் ஆன கதாபாத்திரம் அதனால ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாதான் இருந்துச்சு. அப்புறம் பழகிடுச்சி, என்னால முடிஞ்ச அளவுக்கு, நா கார்கி காதாபாத்திரத்திற்கு உயிர் குடுக்க முயற்சி செஞ்சிருக்கேன்.
கேள்வி: காளி வெங்கட் பத்தி சொல்லுங்க அவர் கூட வொர்க் பண்ணது எப்படி இருந்துச்சு.
சாய் பல்லவி: காளி வெங்கட் ரொம்ப சைலென்ழ்ட்டான நபர். 3/4 பட காட்சில நானும் அவரும் ஒன்னா டிரெவல் பண்ணோம் அப்புறம் ரொம்ப ஜாலியான நபர் .
கேள்வி: நீங்க கார்கி படத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
சாய் பல்லவி: ஒரு படம் அப்படிங்குறத தாண்டி நான் முக்கியமா பாக்குறது கதைக்கருதான். அது இந்த படத்துல ரொம்ப நல்லா இருந்துச்சு அதனாலதான் இந்த கதையைத்தேர்வு செஞ்சேன். இந்த கதை மட்டு இல்ல எல்லா படத்தையும் நா இப்படிதான் தேர்வு செய்வேன்.
கேள்வி: ஆன்மீகம் பற்றிய உங்க பார்வைய சொல்லுங்க..
சாய் பல்லவி: எனக்கு சரியா தெரியல நானே இப்போ அத தெரிஞ்க்குற முயற்சிலதான் இருக்கேன் ஆனா இந்த பாதை எனக்கு பிடிச்சிருக்கு மனநிம்மதி கெடைக்குது.
கேள்வி: உங்க கிட்ட உங்களுக்கு புடிச்ச விஷயம்னா எதைச் சொல்லுவீங்க
சாய் பல்லவி: அதையெல்லாம், எதுவும் இல்ல. நான் என்கிட்ட புடிக்காத விஷயம் வேணும்னா சொல்லுறேன "இப்போல்லாம் ரொம்ப கோவம் வருது. அத கட்டுப்படுத்தணும் "
கேள்வி: ரொம்ப கோவம் அதிகமான என்ன பண்ணுவீங்க?
சாய் பல்லவி: ரொம்ப கோவம் வந்தா அழுதுடுவேன்
கேள்வி: உங்கக்கிட்ட புடிச்ச விஷயம்னு ஒன்னு கூடவா மேடம் இல்ல ஒன்னு சொல்லுங்க..
சாய் பல்லவி: நீங்க இப்போ என்ன கஷ்டப்படுத்திட்டா, நா அதை மறந்துடுவேன். அதுதான் நல்ல விஷயம்னு நினைக்குறேன்.