மேலும் அறிய

Sai Dharam Tej | பதறவைத்த வீடியோ.. தெலுங்கு நடிகரின் விபத்துக்கு இதுதான் காரணம்.. போலீசாரின் விளக்கம்!

ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலையில் எதுவும் பலத்த அடிபடவில்லை என்றாலும் வண்டி நிலைதடுமாறியதால் சாய் தரம் தேஜின் உடலில் மற்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. 

இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்த தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் தற்போது ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹைதராபாத்தின் முக்கியப் பகுதியான மாதாப்பூர் பாலத்துக்கு அருகே சாய் தரம் தேஜ் சென்ற இருசக்கர வண்டி நிலைதடுமாறிச் சரிந்து விபத்துக்குள்ளானது. ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலையில் எதுவும் பலத்த அடிபடவில்லை என்றாலும் வண்டி நிலைதடுமாறியதால் சாய் தரம் தேஜின் உடலில் மற்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. 

இந்நிலையில் அவருக்கு விபத்து ஏற்பட்டது குறித்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அதில் சாய் தரம் தேஜ் அதிவேகத்தில் சென்றதே விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. அவர் பாலத்தில் பயணம் செய்தபோது வேகத்தை குறைத்திருக்க வேண்டும். அந்த பாலத்தில் அனுமதிக்கப்பட்ட வேகம் என்பது 30-40 கிமீ தான். ஆனால் சுமார் 80-100 கிமீ வேகத்தில் சாய் சென்றுள்ளார். அந்த அதிவேகமே அவரை விபத்துக்குள் சிக்கவைத்துள்ளது. அதிவேகத்தில் முன்னால் சென்ற வாகனத்தை கடந்து செல்ல முயற்சி செய்த போது பிரேக் அடித்ததால் அவர் பைக் ஸ்கிட் ஆகியுள்ளதே விபத்துக்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

man vs wild : காட்டுக்குள் சாகசம்.. பியர் கிரில்ஸுடன் பயணம் செய்யும் பிரபல நடிகர்!

Sai Dharam Tej | பதறவைத்த வீடியோ.. தெலுங்கு நடிகரின் விபத்துக்கு இதுதான் காரணம்.. போலீசாரின் விளக்கம்!

முன்னதாக, சாலையில் நிலைதடுமாறி விழுந்த சாய் தரம் தேஜை காப்பாற்றியது யார் என அனைவரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அப்துல் என்பவர் குறித்து தெலுங்கு செய்தி சேனல்கள் ஒளிபரப்பின. சாலையில் அடிபட்டுக்கிடந்த சாய் தரம் தேஜை காப்பாற்றியது அப்துல்தான் எனக் கூறப்படுகிறது. அமீர்பெட் யெல்லரெட்டிகூடா பகுதியை சேர்ந்த அப்துல் ஐதராபாத் சி.எம்.ஆர். கல்லூரியின் பார்க்கிங் பகுதியில் பணிபுரிபவர். சம்பவம் நடந்த அன்று தற்செயலாக அப்துல் அதே மாதாபூர் பகுதி வழியாக நிஜாம்பெட் வரை சென்றுள்ளார்.

சாய் தரம் தேஜ் சென்ற வண்டி நிலைகுலைந்து விழுவதைப் பார்த்ததும் உடனடியாக போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸுக்கு அழைத்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் சாய் தரம் தேஜூடன் ஆம்புலன்ஸில் ஆஸ்பிடல் வரை சென்றுள்ளார். இந்த விவகாரமும் இணையத்தில் வேகமாக பரவ அவருக்கு ரசிகர்கள் பலரும் நன்றியை தெரிவித்தனர்.

Sai Dharam Tej | பதறவைத்த வீடியோ.. தெலுங்கு நடிகரின் விபத்துக்கு இதுதான் காரணம்.. போலீசாரின் விளக்கம்!

இதற்கிடையே சாய் தரம் தேஜை மருத்துவமனைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்த சிரஞ்சீவி, அவர் நலமாக இருப்பதாகவும் ரசிகர்கள் அச்சப்படும் அளவுக்கு ஒன்றுமில்லை என்றும் பதிவிட்டுள்ளார். சிரஞ்சீவி தவிர ராம் சரண், உபாசனா, சீரஞ்சீவி தம்பி மகள் நிகாரிகா உள்ளிட்டவர்களும் மருத்துவமனைக்குச் சென்று சாய் தரம் தேஜ் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தனர்.சாய் தரம் தேஜ் நடிப்பில் ‘ரிப்பப்ளிக்’ என்னும் திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
Embed widget