அட்லீ படத்திற்கு இசையமைக்கும் சாய் அப்யங்கர்...வெளியான மாஸ் அப்டேட்
அல்லு அர்ஜூனின் அடுத்த படத்தை அட்லீ இயக்கவிருப்பதாக எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சாய் அப்யங்கர்
பிரபல பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணி தம்பதியின் மகன் சாய் அப்யங்கர். 21 வயதாகும் இவர் சென்னை ஐஐடியில் கல்லூரி படித்துக் கொண்டிருக்கிறார். தனது பெற்றோர்களைப் போலவே சாய் அப்யங்கர் சின்ன வயதில் இருந்து இசையில் ஆர்வம் கொண்டவர். பாடல்கள் எழுதுவது , பாடுவது , இசையமைப்பது , ப்ரோகிராமிங் , என தொழில்நுட்ப ரீதியாகவும் பயிற்சி பெற்றிருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத்தின் இசைக்குழுவின் பிரபல பாடல்களுக்கு ப்ரோகிராமிங் செய்துள்ளார். சாய் அப்யங்கர் இசையமைத்து வெளியிட்ட கட்சி சேர மற்றும் ஆச கூட ஆகிய இரு பாடல்களும் பட்டிதொட்டி எல்லாம் ஹிட் அடித்தன.
தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் மற்றும் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 45 ஆகிய இரு படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தொடர்ந்து அட்லீ இயக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
அட்லீ படத்தில் சாய் அப்யங்கர்
ஜவான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அட்லீ தனது அடுத்த படத்திற்கு ரெடியாகி வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜூன் வைத்து அல்லது இந்தியில் சல்மான் கான் இரண்டில் ஒரு பெரிய நடிகரின் படத்தை அட்லீ இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைத் தொடர்ந்து அட்லீயுடன் அவர் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்திய படமாக இந்த படத்தை அட்லீ இயக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
#SaiAbhyankar in talks for the music director of #AlluArjun - #Atlee film😲🔥
— AmuthaBharathi (@CinemaWithAB) February 10, 2025
What an incredible growth to be in consideration for potential 1000cr film👌📈 pic.twitter.com/06Zhpzu7O9
இந்த படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு காலத்தில் அடுத்தடுத்த பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைத்து அனிருத் வளர்ந்ததைப் போல தற்போது சாய் அப்யங்கரின் வளர்ச்சி பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : தனுஷ் டைரக்ஷன் எப்படி ? நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் பற்றி மாரி செலவ்ராஜ்
இப்போவே ப்ரோமோஷனைத் தொடங்கிய சூர்யா..காமிக் வடிவில் வெளியான ரெட்ரோ BTS
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

